Thagappan: என் தங்கப்புள்ள.. ஜீவாவின் தகப்பன் படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்..!
Thagappan First Single: தமிழில் ஜீவாவின் நடிப்பில் அப்பா மற்றும் மகனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் தகப்பன். இந்த படமானது வரும் 2026 டிசம்பரில் வெளியாக தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து 'தங்கப்புள்ள' என்ற முதல் சிங்கிளை படக்குழு பகிர்ந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் மக்களிடையே நடிப்பின் மூலம் ரசிக்கப்பட்டுவரும் நடிகராக இருப்பவர்தான் ஜீவா (Actor Jiiva). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (TTT Movie). இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சத்யதேவ் இயக்கியிருந்த நிலையில், காமெடி மற்றும் எமோஷனல் கதையில் கடந்த 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது ஜீவாவுக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்‘ (Jolliya Iruntha Oruthan) என்ற படத்தில் இணைந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் ரா. வெங்கட் (Ra. Venkat) இயக்கத்தில் ஜீவா இணைந்த திரைப்படம்தான் தகப்பன் (Thagappan Movie). அப்பா மற்றும் மகனின் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026 டிசம்பரில் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள நிலையில், தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!
தகப்பன் படத்தின் தங்கப்புள்ள பாடல் குறித்து நடிகர் ஜீவா பகிர்ந்த எக்ஸ் பதிவு:
The poetry, the joy, and the most beautiful celebration of our lives. ❤️
Experience love in its purest form with #Thangapulla – the first single from #Thagappan
🔗https://t.co/k3S8KaxwgW
@larkstudios1 @JiivaOfficial @rajisha_vijayan @LakshmyRamki @ravenkatdir83 @marshall_musicc @dopmsukumar @Inagseditor @MaheshMathewMMS #BalaKumar @dineshashok_13 @Udaykumar_Mix @prithivipradeep @kumarkarupannan @thinkmusicindia @ZeeTamil @proyuvraaj
— Jiiva (@JiivaOfficial) October 30, 2026
தகப்பன் படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த தகப்பன் படத்தில் லீட் நாயகனாக நடிகர் ஜீவா நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடித்துள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே கர்ணன், பைசன் மற்றும் சர்தார் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஜீவாவின் தகப்பன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த தகப்பன் படமானது அப்பா மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் பாசப்போராட்டம் மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்!
இந்த படத்தில் ஜீவா அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் அவர் இவ்வாறு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் இதர அப்டேட்டுகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.