IND vs NZ: ஒரே ஓவரில் ஓடோடிய ரன்கள்.. மோசமான சாதனையை பந்துவீசி பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி!
Nitish Reddy Unwanted Record: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில், நிதிஷ் குமார் ரெட்டி ஒரே ஓவரில் 32 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம், டி20 சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களில் ஒருவரானார். கிளென் பிலிப்ஸ் 4 சிக்ஸர்கள் உட்பட இந்த ஓவரில் ரன்களை குவித்தார். சிவம் துபே, ஸ்டூவர்ட் பின்னிக்கு அடுத்து நிதிஷ் ரெட்டி இந்த மோசமான பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையிலான 4வது டி20 போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் பட்டியலில் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பெயரும் தற்போது இணைந்துள்ளது. இன்று அதாவது 2026 அக்டோபர் 30ம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) ஒரே ஓவரில் 32 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம், மோசமான சாதனை பட்டியலில் நிதிஷ் குமார் ரெட்டி தனது பெயரையும் சேர்த்துகொண்டார்.
ALSO READ: சரமாரியாக அடித்து சதத்தை போட்ட பிலிப்ஸ்.. இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு!




என்ன நடந்தது..?
32 run in over of nitish reddy 🥺🥺🇮🇳 #INDvsNZ #Indian https://t.co/Ms5acqdw6k
— Ace moglu (@moglu_ace) October 30, 2026
போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் குமார் ரெட்டிக்கு 16வது ஓவரை வழங்கினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின்னர் கிளென் பிலிப்ஸ் ஸ்ட்ரைக் வந்தார். இரண்டாவது பந்து நோ-பால் ஆக இருந்ததால், அது ஒரு பவுண்டரியில் முடிந்தது. இரண்டாவது, அல்லது ஃப்ரீ ஹிட் பந்தில், இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. நியூசிலாந்தின் பிலிப்ஸ் அடுத்த நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அடித்தார். இதனால் ரெட்டி தனது ஓவரில் 32 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், ஒரு டி20 சர்வதேச ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனை பட்டியலில் சிவம் துபே முதலிடத்தில் உள்ளார். துபே கடந்த 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 34 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2016-ல், இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 32 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம், நிதிஷ் குமார் ரெட்டி அதே பத்து வருடப் பழைய வரலாற்றை மீண்டும் நிகழ்த்தி, அதே எண்ணிக்கையிலான ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி தனது 4 ஓவர் பந்துவீச்சில் 16 என்ற எகானமி ரேட்டில் 64 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ALSO READ: சுப்மன் கில்லின் நெத்தியில் புதிய சாதனம்.. வைரலாகும் டெம்பிள்.. அது என்ன?
ஒரு டி20 சர்வதேச ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்
- 34 ரன்கள் – சிவம் துபே vs நியூசிலாந்து, மவுண்ட் மவுங்கானுய் 2020
- 32 ரன்கள் – ஸ்டூவர்ட் பின்னி vs வெஸ்ட் இண்டீஸ், லாடர்ஹில் 2016
- 32 ரன்கள் – நிதிஷ் ரெட்டி vs நியூசிலாந்து, ஆக்லாந்து 2026*
- 29 ரன்கள் – ரவி பிஷ்னோய் vs இங்கிலாந்து, மான்செஸ்டர் 2026
இந்தியாவிற்கு 260 ரன்கள் இலக்கு:
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்து, இந்தியாவிற்கு 260 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை அடித்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்தார். பிலிப்ஸும் பிரேஸ்வெல்லும் 5வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தனர். இலக்கை துரத்திய இந்திய அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.