Gold Price : இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ரூ.1,200, ரூ.5,000 சரிவு!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி கடும் சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 30 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் உயர்வுக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்
இந்த ஆண்டு தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து தொடர் சரிவை சந்தித்து தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான், கடந்த நான்கு நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம் இன்று மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : பிஎம் கிசான் 24வது தவணை.. தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,225-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.210-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.