AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆந்திராவை நோக்கி நகரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Rainfall Alert: தற்போதைய வானிலை மாதிரிகளின்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது வலுவடையாமல் குறைந்த தீவிரத்திலேயே நீடித்தால், வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவை நோக்கி நகரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Oct 2026 09:01 AM IST

அக்டோபர் 30, 2026: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 31ஆம் தேதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளம் தாய் கைது.. காதலன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!!

வட தமிழகத்திற்கு மழை இருக்கும் – பிரதீப் ஜான்


இதற்கிடையே, புயல் அர்னாப் (Cyclone Arnab) தாக்கத்தின் காரணமாக நிலவிய வானிலை மாற்றங்கள் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் உருவாகும் இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதன் காரணமாக வட தமிழகத்தின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் வடக்குப் பகுதியில் மழைக்கான காற்று குவிதல் (Convergence Zone) அதிகமாக இருக்கும் என்பதால், கனமழையின் பெரும்பகுதி வட தமிழகத்தை விட வடக்குப் பகுதிகளிலேயே பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஒரு புயல் உருவாகுமா?

தற்போதைய வானிலை மாதிரிகளின்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது வலுவடையாமல் குறைந்த தீவிரத்திலேயே நீடித்தால், வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க: ரூ.5000 கோடி நிதி மோசடி வழக்கு.. சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமார்!!

அதேசமயம், இந்த அமைப்பு புயலாக வலுப்பெற்றால் வட தமிழகத்திற்கான மழை வாய்ப்புகள் குறையக்கூடும். ஏனெனில், அதன் சுழற்சி மற்றும் மழைப்பொழிவு அமைப்பு வட தமிழகப் பகுதிகளிலிருந்து விலகி நகர வாய்ப்புள்ளது.

எனவே, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தீவிரம், நகரும் திசை மற்றும் மழைப்பொழிவு தொடர்பாக அடுத்த 1 முதல் 2 நாட்களில் கூடுதல் தெளிவு கிடைக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Follow Us