AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மது பிரியர்களுக்கு ஷாக்! டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்வு.. நவ.1 முதல் அமல்..

TASMAC Price Hike: மனித நுகர்வுக்கான மதுபான விற்பனையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக (Environmental and Social Welfare Fee) விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL), பீர், ஒயின், வெளிமாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் என அனைத்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையும் ரூ.10 உயர்த்தப்படுகிறது.

மது பிரியர்களுக்கு ஷாக்! டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்வு.. நவ.1 முதல் அமல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Oct 2026 09:47 AM IST

அக்டோபர் 30, 2026: தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக்கில் பாடிலுக்கு ரூ. 10 உயர்வு:

இந்த உத்தரவின்படி, மனித நுகர்வுக்கான மதுபான விற்பனையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக (Environmental and Social Welfare Fee) விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL), பீர், ஒயின், வெளிமாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் என அனைத்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையும் ரூ.10 உயர்த்தப்படுகிறது.

மேலும் படிக்க: ஆந்திராவை நோக்கி நகரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?

இந்த விலை உயர்வு அனைத்து அளவிலான மதுபான பாட்டில்களுக்கும் பொருந்தும். மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மட்டுமின்றி, உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும் திருத்தப்பட உள்ளது. டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுக்கூடங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும் புதிய சில்லறை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.

புதிய விலைச்சீட்டு அச்சிட உத்தரவு

மதுபான உற்பத்தியாளர்கள், திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் அனைத்து வரிகளுடன் ரூ.10 கட்டணத்தையும் சேர்த்து பாட்டில்களின் விலைச்சீட்டில் அச்சிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பாட்டில்களிலும் புதிய விலைக்கான விலைச்சீட்டுகளை ஒட்ட வேண்டும். நவம்பர் 1 முதல் விநியோகிக்கப்படும் அனைத்து மதுபானங்களிலும் திருத்தப்பட்ட விலை இடம்பெறுவதை உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்!

இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கவும் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதில், தமிழகம் முழுவதும் 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருவதாகவும், இக்கடைகளில் ரொக்கம், யுபிஐ, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாயிலாகப் பணம் பெறப்பட்டாலும் பெரும்பாலான விற்பனைத் தொகை ரொக்கமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.5000 கோடி நிதி மோசடி வழக்கு.. சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமார்!!

மேலும், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் பெறும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகை மற்றும் நேரம் பதிவாகும் என்பதால், எம்.ஆர்.பி. விலைக்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பதைத் தவிர்க்க முடியும் என்றும், விற்பனைத் தொகை நேரடியாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us