AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளம் தாய் கைது.. காதலன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!!

Ennore Newborn Murder Case: சென்னையை அடுத்த எண்ணூரில் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற 18 வயதுத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தகாத உறவால் பிறந்த குழந்தையைக் கொன்ற விவகாரத்தில், காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதுடன், இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளம் தாய் கைது.. காதலன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 30 Oct 2026 07:19 AM IST

சென்னை, அக்.30: சென்னையை அடுத்த எண்ணூர் தேஜை நகர் பகுதியைச் சேர்ந்த கோகிலா (18) என்ற இளம் பெண், கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியன்று கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாகப் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவமனையில் இயற்கை உபாதைக்காகச் சென்றபோது திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பச்சிளம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே எந்தவிதச் சலனமும் இன்றிப் பேச்சுமூச்சின்றி இருப்பதாக கூறி அந்தப் பெண்ணைக் குழந்தையுடன் மருத்துவரிடம் காட்டியுள்ளனர். உடனடியாக மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு ஆர்.எஸ்.ஆர். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். மர்மமான முறையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்துத் திருவொற்றியூர் காவல்துறையினர் சந்தேக மரண் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மைகள்:

மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, நெஞ்சைப் பதற வைக்கும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அந்தப் பெண் குழந்தையின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதும், குழந்தையின் தலையில் சுவரில் இடித்தால் ஏற்படும் அளவிலான பலத்த காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையைப் பெற்றெடுத்த தாய் கோகிலாவிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சந்தோஷ் என்பவருடன் தனக்குத் நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும், அதன் விளைவாகவே தான் கர்ப்பமடைந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். தன் வீட்டாருக்குத் தான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பது பிரசவ வலி வரும் வரை தெரியாது என்றும், கடுமையான மனக்குழப்பம் மற்றும் அச்சம் காரணமாகவே தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் கோகிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

காதலன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்:

இளம் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் காதலன் சந்தோஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கோகிலா சிறுமியாக (17 வயது) இருக்கும் போதிலிருந்தே அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது காவல்துறையினர் கடுமையான வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணம் மற்றும் குடும்பத்தினருக்குப் பயந்து பச்சிளம் உயிரைக் காவு வாங்கிய இந்தச் செயலில் தொடர்புடைய இளம் தாய் கோகிலாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய காதலன் சந்தோஷையும் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!

அதிகரித்து வரும் விழிப்புணர்வின்மை:

பிறந்த சில நிமிடங்களிலேயே தாய் தனது சொந்தக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் எண்ணூர் பகுதியிலும் சென்னை முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் ஏற்படும் முறையற்ற உறவுகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பயம் போன்றவை இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்களுக்கு வழிவகுப்பது குறித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் உளவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முறையான விழிப்புணர்வும் மனநல ஆலோசனைகளும் இல்லாததே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us