அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். இருப்பினும், மழைக்கு வாய்ப்பு குறைவாகவும் வறண்ட வானிலை நிலவவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவானது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: இதெல்லாம் சரியா? தவெக எம்எல்ஏவின் குழந்தையை கவனிக்கும் பெண் அதிகாரிகள்.. பல்லவி கண்ணில் படாமல் தெறித்து ஓடும் அலுவலர்கள்?
அக்டோபர் 30 முதல் மழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 30-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 31-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 1-ம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 2, 3-ல் கனமழை எச்சரிக்கை
நவம்பர் 2-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி, இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை பிராட்வே செல்லப்பிராணிகள் சந்தைக்கு தடை! மீறுவோர் மீது கடும் நடவடிக்கை – மாநகராட்சி அதிரடி..
சென்னையில் வறண்ட வானிலை நிலவுமா?
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். இருப்பினும், மழைக்கு வாய்ப்பு குறைவாகவும் வறண்ட வானிலை நிலவவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.