AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணின் பாயும் NVS-03 செயற்கைக்கோள்!

NVS - 03 Rocket Launch: இந்த NVS-03 செயற்கைக்கோள், இந்தியாவின் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான NavIC (Navigation with Indian Constellation) திட்டத்தின் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இந்தியா முழுவதும் துல்லியமான வழிகாட்டுதல் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதுடன், இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளுக்கும் வழிசெலுத்தல் சேவைகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணின் பாயும் NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணின் பாயும் NVS-03 செயற்கைக்கோள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Oct 2026 08:36 AM IST

அக்டோபர் 30, 2026: இந்தியாவின் வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இஸ்ரோ (ISRO) இன்று (அக்டோபர் 30) NVS-03 என்ற புதிய வழிகாட்டுதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண்ணில் பாயும் NVS-03 செயற்கைக்கோள்

இந்த NVS-03 செயற்கைக்கோள், இந்தியாவின் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான NavIC (Navigation with Indian Constellation) திட்டத்தின் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இந்தியா முழுவதும் துல்லியமான வழிகாட்டுதல் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதுடன், இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளுக்கும் வழிசெலுத்தல் சேவைகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக சுமார் 2,250 கிலோ எடை கொண்ட NVS-03 செயற்கைக்கோள், GSLV-F18 ராக்கெட் மூலம் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த GSLV-F18 ராக்கெட்டின் 20-வது விண்வெளிப் பயணமாக இது அமைகிறது. ராக்கெட் ஏற்கெனவே இரண்டாவது ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டு, விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ‘சூப்பர் எல்நினோ’ கோரத்தாண்டவம்.. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 55,000 பேர் உயிரிழக்கலாம்.. நடக்கப்போகும் விபரீதம்!!

இன்று (அக்டோபர் 30) இரவு 11.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F18 ராக்கெட் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நேரடி ஒளிபரப்பு இரவு 11.20 மணி முதல் இஸ்ரோ இணையதளத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள் என்ன?

NVS-03 செயற்கைக்கோளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுக்கடிகாரம் இடம்பெற்றுள்ளது. இதனுடன் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட அணுக்கடிகாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் L5 மற்றும் S அலைவரிசைகளுடன் கூடுதலாக L1 சிக்னலும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வழிசெலுத்தல் சேவைகளின் துல்லியம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த முடியும்.

மேலும் படிக்க: 543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 90% வரை விலை சரிவு – நவம்பர் 9 முதல் அமல்!

இந்தியாவின் NavIC அமைப்பு, அமெரிக்காவின் GPS சேவைக்கு மாற்றாக இந்தியா உருவாக்கியுள்ள சுயாதீன செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொழில்நுட்பமாகும். வாகனப் போக்குவரத்து, கடல்சார் வழிகாட்டுதல், விமானப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.

NVS-02 செயற்கைக்கோள் ஏவுதலில் ஏற்பட்ட தோல்வி!

கடந்த 2025 ஜனவரி மாதம் NVS-02 செயற்கைக்கோளை GSLV-F15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. ஆனால், செயற்கைக்கோளைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் பணியின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டின் இயந்திரத்தில் உள்ள ஆக்ஸிடைசர் குழாயின் பைரோ வால்வுக்குத் தேவையான இயக்கச் சமிக்ஞை கிடைக்காததே இதற்குக் காரணம் என ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த உயர்மட்டக் குழு பரிந்துரைத்த திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது NVS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகியுள்ளது.

Follow Us