டாஸ்கின்போது பேனிக்-ஆன அக்ஷிதா.. பிக் பாஸில் பரபரப்பு – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss 10 promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் கவ்பாய்ஸ் Vs மாஃபியாஸ் என்ற டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், விறுவிறுப்பாக இருக்கிறது. இந்நிலையில் டாஸ்கின்போது அக்ஷிதா பேனிக்-ஆனது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026ம் செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் (30/10/2026) இந்நிகழ்ச்சியானது தொடங்கி 54வது நாட்களாகியுள்ளது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுவந்த நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி மற்றும் எவிக்ஷன் எல்லாவற்றையும் கடந்து தற்போது மொத்தம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஈடு செய்துவருகிறார்கள். டைமென்ட் ஹெய்ஸ் டாஸ்க் சிறப்பாக சென்றதை அடுத்து, வார வாரம் டீம் டாஸ்க் நடைபெற்றுவருகிறது.
அந்த விதத்தில் இந்த வாரத்தில் கவ்பாய்ஸ் Vs மாஃபியாஸ் (Cowboys and Mafias) என்ற டாஸ்கானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று (30/10/2026) கொடுக்கப்பட்ட முதல் டாஸ்க் “பாலை தள்ளு கோலை அல்லு” என்ற டாஸ்க் நடைபெற்றிருந்தது. இந்த டாஸ்கின்போது அக்ஷிதா பேனிக்-ஆகியுள்ளார் இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அதற்காக மட்டும் நான் படம் எடுக்கும் ஆள் கிடையாது.. வெளிப்படையாக சுந்தர் சி பகிர்ந்த விஷயம்!
டாஸ்கின்போது பேனிக்-ஆனா அக்ஷிதா அசோக்:
இன்று நடைபெற்றிருந்த முதல் டாஸ்கான “பாலை தள்ளு கோலை அல்லு” என்ற டாஸ்கின்போது இரு அணிகளும் தங்களின் கோலுக்காக டாஸ்கில் தீவிரமாக இருந்தனர். இதில் மாஃபியா அணியில் இருந்த அக்ஷிதா இந்த டாஸ்க் நடைபெற்றிக்கொண்டுருக்கும்போதே பேனிக்-ஆகி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?
உடனே போட்டியாளர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவ அறைக்கு அழைத்த சென்றுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் அக்ஷிதாவின் நிலை கண்டு அவரின் சகோதரர் அவினாஷ் வருத்தத்தில் இருப்பதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 54வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day54 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/fWjADi1lCZ
— Vijay Television (@vijaytelevision) October 30, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் கவ்பாய்ஸ் Vs மாஃபியாஸ் டாஸ்க்குடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த டாஸ்கின்போது போட்டியாளர்கள் இரு அணிகளாக இருக்கும் நிலையில், மாறிமாறி மோதிக்கொள்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வாரத்தில் எல்லா போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ள நிலையில், யாரை வெளியேறுவார் என்பது குறித்து எந்தவித யோசனையும் இல்லை. ஆனால் இந்த வாரத்தில் முத்தழகி அல்லது அஷ்மிதா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்த்து பார்க்கலாம்.