உங்கள் பழைய “Black and White” புகைப்படத்தை கலராக மாற்றலாம்.. ChatGPT-ல் இதை செய்தாலே போதும்!
How to Colorize Black and White Photos | அனைவரது வீட்டிலும் ஒரு பிளாக் அண்ட் வைட் பழைய புகைப்படம் இருக்கும். இந்த நிலையில், அதிக செலவு செய்யாமல் வீட்டில் இருந்தே அந்த பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை சாட்ஜிபிடி மூலம் கலராக்குவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.
மனிதர்கள் மிகப்பெரிய சொத்தாக கருதக்கூடியவற்றில் ஒன்றுதான் புகைப்படங்கள். காரணம் புகைப்படங்களால் மட்டும் தான் ஒரு நிகழ்வை உறைய வைக்க முடியும். எப்போது அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாலும் அந்த நிகழ்வை அப்படியே கண் முன் நிறுத்தம் அம்சத்தை புகைப்படங்கள் கொண்டுள்ளன. தற்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) உள்ளன. எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், முன்பெல்லாம் அப்படி அல்ல. ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப புகைப்படம் மட்டும் தான் இருக்கும். அந்த புகைப்படமும் அப்போதைய தொழில்நுட்பத்திலான பிளாக் அண்ட் வைட் புகைப்படங்களாக (Black and White Photo) தான் இருக்கும்.
இந்த நிலையில் தான், அத்தகைய பிளாக் அண்ட் வைட் புகைப்படங்களை ஸ்டுடியோவுக்கு செல்லாமலே வீட்டில் இருந்தே சாட்ஜிபிடி (ChatGPT) மூலம் கலராக மாற்ற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : ஜனவரி முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்.. ஆக்டிவ் சிம் கார்டை கட்டாயமாக்கிய அரசு!




பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை கலராக்குவது எப்படி?
- முதலில் சாட்ஜிபிடி செயலிக்குள் சென்று, அங்குள்ள பிளஸ் சிம்பிளை கிளிக் செய்து நீங்கள் எடிட் செய்ய உள்ள புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன்பிறகு அந்த புகைப்படத்தை நீங்கள் எப்படி மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அதனை சிறிய வாக்கியமாக டைப் செய்ய வேண்டும்.
- உதாரணமாக “Turn this black and white family photo into colour photo” என டைப் செய்ய வேண்டும்.
- உங்கள் கோரிக்கையை ஏற்று, சாட்ஜிபிடி உங்களது பழைய புகைப்படத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
- பிறகு உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப சிறந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுக்கும்.
இதையும் படிங்க : ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் இந்தியாவில் அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
மேலே குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்றி மிக சுலபமாக பழைய பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை கலராக மாற்றலாம். ஒருவேளை சாட்ஜிபிடி கொடுத்த அவுட்புட் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் மேலும் சில மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.