தி.மலையில் சாலையின் குறுக்கே வந்த சிலர்.. கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. பலத்த காயத்துடன் 35 பேருக்கு சிகிச்சை!
Tiruvannamalai Private Bus Accident : திருவண்ணாமலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததனியார் பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர் . அவர்கள் வந்தவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி – திண்டிவனம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலையின் எதிரே சிலர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பேருந்தை திருப்பினார். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தறி கெட்டு ஓடி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துல்லானது. யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்து அலறல் சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பயணிகள் காயம்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக நான் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், சுமார் 35- க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கண்களை மறைத்த சொத்து.. தாத்தா என்றும் பாராமல் வெட்டி வீசிய பேரன்… நாங்குநேரியில் கொடூர சம்பவம்!
வந்தவாசி மருத்துவமனையில் பயணிகளுக்கு சிகிச்சை
இந்த சம்பவம் தொடர்பாக வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வந்தவாசி மருத்துவமனையில் குவிந்தனர்.
வந்தவாசி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
முன்னதாக விபத்து நடந்த இடத்தில் சாலை ஓர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து கிடந்ததால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய தனியார் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். வந்தவாசி பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவமும், அதில் பயணித்த 35- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: என்னை காவு கொடுக்க திட்டம்.. வாழ ஆசை படுகிறேன்.. தேனி சிறையில் இருந்து தப்பியது குறித்து கைதி பகீர் வீடியோ!