AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும்.. எடப்பாடி கே. பழனிசாமி!

AIADMK District Secretaries Meeting Edappadi Speaks : தமிழகத்தில் நடைபெற உள்ள 5 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார் .

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும்.. எடப்பாடி கே. பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Nov 2026 20:18 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 1- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 84 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இதில், அதிமுக வளர்ச்சி பணி, அதிமுக மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, எதிர்வரும் 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

எதிர்க் கட்சிகளுக்கு கடும் போட்டியை அதிமுக கொடுக்கும்

எனவே, இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் தயாராக இருத்தல் வேண்டும். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அதிமுக கடும் போட்டியே கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போது, இடைத்தேர்தல் நடைபெற்றாலும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். புதிதாக மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர்கள் தங்கள் பகுதிகளில் அதிமுகவை பலப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க: தோல்வியிலும் வெற்றி கண்டது திமுக.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.. சேகர் பாபு கடும் தாக்கு!

மா.செ.க்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள்

அத்துடன் தங்கள் பகுதிகளில் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அத்துடன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களில் சிலர் மீண்டும் தாய் கழகத்துக்கு வருகிறோம் என்றும், அதே பதவியே கொடுங்கள் என்று கேட்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய விருப்பம்

அதற்கு, அதிமுகவிலேயே சேர்த்து கொள்கிறோம். ஆனால், அதே பதவி வழங்க முடியாது. அதைப்பற்றி பிறகு பார்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி பதில் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையே அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிமுகவில் புதிய மா.செ. அறிவிப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், கட்சியை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற அச்சமா? மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்யை வெளுத்த நயினார்!

Follow Us