நாகையில் பேரதிர்ச்சி.. 4 ஆண்டு உழைப்பை நாசமாக்கிய கரையான்.. சேமித்து வைத்த ரூ.4.88 லட்சம் தூள் தூளானது!
Nagapattinam Termites Ate Currency Notes : நாகப்பட்டினம் மாவட்டத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் உழைத்து சம்பாதித்த ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் பணத்தை வீட்டின் மர அலமாரியில் வைத்திருந்தபோது அதை கரையான் அரித்தது. இதனால், அவர் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், நீலா மேல வீதியில் வசித்து வந்தவர் செல்வம் முருகன் ( 30 வயது). எலக்ட்ரீசியன் பணி செய்து வருகிறார். இவர், வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று ஒப்பந்த அடிப்படையில் தங்கி இருந்து வேலைகளை பார்த்து வருவது வழக்கம். அதன்படி, இந்த வேலைகளில் கிடைக்கும் வருமானத்தை தனது வீட்டில் உள்ள மர பீரோவில் சேமித்து வைத்திருந்தார். இதில், சுமார் ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் சேமித்து வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு தேவையான மின் சாதன பொருட்களை வாங்குவதற்காக வீட்டில் உள்ள மர பீரோவை திறந்த போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உறைந்து போனார். அதில், கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை கரையான் அரித்து இருந்தது.
ரூ.4.88 லட்சத்தை கரையான் அரித்தது
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ. 4.88 லட்சம் மதிப்பிலான ரொக்கம் கரையான்களால் அளிக்கப்பட்டு செதில், செதிலாக கிழிந்து சிதறி கிடந்தன. ரூபாய் நோட்டுகள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதறி கிடந்ததை பார்த்த எலக்ட்ரீசியன் செல்வ முருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தான் கஷ்டப்பட்டு, வெளியூர் சென்று வேலை பார்த்து உழைத்து சேர்த்து வைத்த பணம் அனைத்தும் வீணாகி விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினார்.
மேலும் படிக்க: நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!




கரையான் அரித்த பணத்தை வங்கியில் மாற்ற சென்றார்
இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து நல்ல ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதை நம்பிய எலக்ட்ரீசியன் செல்வம் முருகன் அருகில் உள்ள வங்கிகளுக்கு சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றபோது, அதனை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர்.
ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் அழிந்தது
அதன்படி, நாகப்பட்டினத்தில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சென்ற செல்வம் முருகன் அங்கு இது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டபோது, ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண்கள் இல்லாத காரணத்தால் மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழு தொகையும் திரும்ப கிடைக்கும் என்று உறுதி அளிக்க முடியாது என்று பதில் அளித்தனர். இதை கேட்டு செல்வ முருகன் மேலும் மன வேதனை அடைந்தார். அத்துடன் தமிழக முதல்வர் விஜய் தனக்கு உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை அள்ளிக் கொடுத்த CM விஜய்.. எவ்வளவு தெரியுமா?