AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.. 1800 பேர் மீதான கிரிமினல் வழக்குகள்.. திரும்ப பெற தவெக அரசு உத்தரவு!

Anti Neet Protests Cases Withdrawal : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு கட்டங்களில் போராட்டத்தி ல் ஈடுபட்டவர்களில் 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.. 1800 பேர் மீதான கிரிமினல் வழக்குகள்.. திரும்ப பெற தவெக அரசு உத்தரவு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Oct 2026 19:46 PM IST

மத்திய அரசு அறிமுகப்படுத்திய நீட் ( இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு) தேர்வுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்த வகையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சுமார் 1,800 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில். அந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2026 மே மாதம் பத்து- ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 31- ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

1800 பேர் மீது 65 குற்ற வழக்குகள் பதிவு

இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 1,800 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: தாக்கியதில் உயிரிழந்த மனைவி.. எரித்து சாம்பலாக்கிய கணவன்.. தோண்டி துலாவி கைது செய்த கடலூர் போலீஸ்!

நீட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ்

அதனை பரிசீலனை செய்த முதல்வர் ஜோசப் விஜய் அந்த வழக்குகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்தார். அதன்படி, முதல்வர் அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து கவனமாக பரிசீலனை செய்து, 1800 பேர் மீதி பதிவு செய்யப்பட்ட 65 குற்றவழக்குகளையும் உடனடியாக திரும்ப பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு

இந்தியாவில் 12- ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளின் பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதில், ஊழல் மற்றும் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில். 12- ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ இடங்களில் சேர முடியும்.

மேலும் படிக்க: அடுத்தடுத்து கைதிகள் தப்பிப்பு.. இதை முதல்ல செய்யுங்க.. சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் கறார் உத்தரவு!

Follow Us