AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை அள்ளிக் கொடுத்த CM விஜய்.. எவ்வளவு தெரியுமா?

DA Hike For Govt Employees : தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரசு ஊழியர்கள் 63 சதவீதம் அகவிலைப்படியை பெறுவார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை அள்ளிக் கொடுத்த CM விஜய்.. எவ்வளவு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 Oct 2026 16:36 PM IST

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு அதே அளவில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 60 சதவீதம் அகவிலைப்படி பெற்று வந்த நிலையில், தற்போது அந்த படி தொகை 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர்

இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள். தற்போது, உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படியால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக தோராயமாக ரூ .1, 230 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் தொகுதியில் ஷோ காட்டும் முதல்வர்.. தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

60- இல் இருந்து 63 சதவீதமாக உயர்வு

இந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இதனை பரிசீலனை செய்து கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியே உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

ஜூலை 1- ஆம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும்

இதன் காரணமாக 60 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!

Follow Us