AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை முதல் ஜிபிஎஸ் கட்டாயம்: இல்லையெனில் வாகனம் பறிமுதல் – கனிமம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எச்சரிக்கை

GPS Mandatory for Vehicles : தமிழகத்தில் மணல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில், நம்பர் 1, 2026 நாளை முதல் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி கட்டாயமாக்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்குப் போக்குவரத்து அனுமதிச்சீட்டு வழங்கப்படாது எனத் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அறிவித்துள்ளது.

நாளை முதல் ஜிபிஎஸ் கட்டாயம்: இல்லையெனில் வாகனம் பறிமுதல் – கனிமம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2026 21:09 PM IST

சென்னை, அக்டோபர் 31 : சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க புவியியல் மற்றும் சுரங்கத் துறை  மணல், ஜல்லி விநியோகம் பாதிக்காமல் இருக்க உடனடியாக ஜிபிஎஸ் கருவி பொருத்துமாறு லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 1, 2026 நாளை முதல் ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்கள் (Mineral Transport Vehicles) பறிமுதல் செய்யப்படும் என்றும் அதன் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

கனிமம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் மணல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில், நம்பர் 1, 2026 நாளை முதல் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி கட்டாயமாக்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்குப் போக்குவரத்து அனுமதிச்சீட்டு வழங்கப்படாது எனத் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : கட்டட அனுமதி நிராகரிப்பா? இனி ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம்

மாநிலத்தில் சட்டவிரோதமாகக் கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கனிம வளங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களிலும், ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தக் கருவியைச் சுரங்கத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான மிமாஸ் தளத்துடன் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

AIS-140 என்றால் என்ன?

AIS-140 என்பது, வாகனங்களின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கான, மத்திய அரசு அங்கீகரித்த தரநிலைச் சான்று. இந்தக் கருவி பொருத்தப்பட்ட வாகனம் எங்கு செல்கிறது, எந்த வழியில் பயணிக்கிறது என்பதை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிக்க முடியும். இதனால், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு இடங்களுக்குக் கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.

இந்தக் கருவியைப் பொருத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் அக்டோபர் 31, 2026 இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, நவம்பர் 1, 2026 நாளை முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிம வாகனங்களுக்கு, போக்குவரத்து அனுமதிச்சீட்டும் கடவுச்சீட்டும் வழங்கப்படாது.ஜிபிஎஸ் கருவியும் செல்லத்தக்க அனுமதிச்சீட்டும் இல்லாமல் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும். அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : தாக்கியதில் உயிரிழந்த மனைவி.. எரித்து சாம்பலாக்கிய கணவன்.. தோண்டி துலாவி கைது செய்த கடலூர் போலீஸ்!

மணல், ஜல்லி விநியோகம் பாதிக்கக் கூடாது என அறிவுறுத்தல்

அதேநேரத்தில், பொதுமக்களுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான மணல், ஜல்லி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை ஜிபிஎஸ் கருவி பொருத்தாத, இணையதளத்தில் இணைக்காத லாரி உரிமையாளர்கள், உடனடியாகத் தங்கள் வாகனங்களில் தர அங்கீகாரம் பெற்ற AIS-140 ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, துறையின் இணையதளத்துடன் இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுமானப் பொருள்களின் தொடர் விநியோகத்தை உறுதி செய்யவும், தேவையற்ற போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகத்துக்கும் சுரங்கத் துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow Us