AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பா? – வதந்திகளுக்கு நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம்

Janani Denies Scam Allegations : நகராட்சி நிர்வாகத் துறைப் பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனச் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பா? – வதந்திகளுக்கு நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2026 18:07 PM IST

நகராட்சி நிர்வாகத் துறைப் பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனச் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது பெயரைத் தொடர்புபடுத்திச் சமூக வலைதளங்களில் (Social Media) தகவல்கள் பரவிய நிலையில், அவர் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வதந்திகளுக்கு நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம்

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையும் படிக்க : நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!

அதை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த 2026 பிப்ரவரியில் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உத்தரவை மறுஆய்வு செய்ய மறுத்து, நேருவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஜனனி அசோக்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

இந்த நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சின்னத்திரை நடிகைகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. அதில் ஜனனி அசோக் குமாரின் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டு பதிவுகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ், இன்ஸ்டாகிராம் தளங்களில் தன்னைத் தொடர்புபடுத்திப் பரவும் ரூ.634 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘எந்த கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை’

மேலும் அவர் தனது அறிக்கையில், தான் எப்போதும் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் இருப்பதாகவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை என்றும், எந்த அரசியல்வாதியுடனும் பழக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிப் பரவும் வதந்திகளுக்கும் தனது உண்மையான வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உண்மைத்தன்மை தெரியாமலும், போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் எப்படிக் குற்றம் சுமத்த முடியும், இதில் நியாயம் எங்கே இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணைக்கு அழைக்கப்படுவது தவறு செய்ததற்கான சான்று ஆகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் தனக்கு மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : டிக்கெட் கட்டணம் ரூ.250, கிரிக்கெட்டுக்கு அனுமதி… முதல்வர் விஜய்யிடம் திரையரங்க உரிமையாளர்கள் வைத்த 9 கோரிக்கைகள்

பல ஆண்டுகளாக, யாருடைய ஆதரவும் இல்லாமல் திரைத்துறையில் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொய்யான செய்திகள் மக்களை எளிதில் நம்ப வைத்துவிடுவதாகக் கவலை தெரிவித்துள்ளார். உண்மை என்னவென்று தெரியாமலேயே, ஒரு பெண் என்பதற்காக மட்டும் அவர் தவறு செய்திருப்பார் என மக்கள் உடனடியாக நம்புவதுதான் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us