AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி நிதி – தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட மானியம்

Tamil Nadu Film Subsidy : சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு ஆண்டுதோறும் திரைப்பட மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.  மானியத் தொகைக்கான காசோலைகளை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி நிதி – தமிழ்நாடு அரசு சார்பில்  திரைப்பட மானியம்
திரைப்பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2026 15:04 PM IST

சென்னை, அக்டோபர் 31 : நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 224 தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, தமிழக அரசின் (Tamil Nadu Government) திரைப்பட மானியமாக மொத்தம் ரூ.15.68 கோடி வழங்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மானியத் தொகைக்கான காசோலைகளை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

224 படங்களின் தயாரிப்பாளர்களுக்கு திரைப்பட மானியம்

சென்னை, கலைவாணர் அரங்கில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான அரசு மானியத்திற்கான காசோலைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இவ்விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் அருண் தம்புராஜ்,தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத் துறை சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் செய்தித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : கோவையில் கைதி தப்பியோடிய விவகாரம்.. அதிரடியாக 4 காவலர்கள் சஸ்பெண்ட்.. தீவிர விசாரணையில் தனிப்படை!!

மானியம் கோரி விண்ணப்பித்த திரைப்படங்களைப் பார்வையிட்டு, தகுதியானவற்றைத் தேர்ந்தெடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு, 8 ஆண்டுகளுக்கும் ஆண்டுக்கு 28 படங்கள் வீதம், மொத்தம் 224 படங்களைத் தேர்ந்தெடுத்து அரசுக்குப் பரிந்துரைத்தது. தேர்வான ஒவ்வொரு படத்தின் தயாரிப்பாளருக்கும் தலா ரூ.7 லட்சம் வீதம், மொத்தம் ரூ.15.68 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணர்வுகள், சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிப்பதுடன், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். பெண் சிசுக்கொலை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ‘கருத்தம்மா’ போன்ற படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவுகூர்ந்தார். வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையுடன் நல்ல படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தகுதியின் அடிப்படையில் விருது

கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட மானியங்கள் தற்போது மீண்டும் வழங்கப்படுவதன் மூலம், தயாரிப்பாளர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : “சிறையைக்கூடப் பாதுகாக்க முடியாத அரசால் எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?”.. கைதிகள் தப்பியோடும் விவகாரத்தில் முதல்வருக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

வருங்காலங்களில், தமிழ் சினிமாவுக்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில அரசின் திரைப்பட விருதுகள், மானியங்கள் ஆகியவை தகுதியின் அடிப்படையில் மட்டுமே, நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும் என்றும், இதுவே முதல்வரின் உறுதியான வழிகாட்டுதல் என்றும் அமைச்சர் தெரிவித்தார். திரைத்துறையின் வளர்ச்சிக்கும், அதைச் சார்ந்தவர்களின் நலனுக்கும், கோரிக்கைகளுக்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருந்து, உரிய தீர்வு காணும் எனவும் அவர் கூறினார்.

Follow Us