AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவண்ணாமலை மலை உச்சியில் போலீசார் பரிகார பூஜை.. கோவில் வளாகத்தில் வெடிகுண்டு சோதனை.. என்ன காரணம்!

Tiruvannamalai Karthigai Deepam Festival : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் போலீசார் பரிகார பூஜை மேற்கொண்டனர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம் .

திருவண்ணாமலை மலை உச்சியில் போலீசார் பரிகார பூஜை.. கோவில் வளாகத்தில் வெடிகுண்டு சோதனை.. என்ன காரணம்!
திருவண்ணாமலையில் காவலர்கள் பரிகார பூஜை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 Oct 2026 20:57 PM IST

திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற நவம்பர் 15- ஆம் தேதி தீபத்திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. நவம்பர் 24- ஆம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் 5.5 அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும். இந்த தீபத்தை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு வரை பார்த்து வழிபட முடியும். இந்த தீப திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் விழா சிறப்பாக நடைபெற வேண்டி மலை உச்சியில் சிறப்பு பரிகார பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அண்ணாமலை மலை உச்சியில் போலீசார் பரிகார பூஜை

அதன்படி, கொப்பரை வைத்து மகா தீபம் ஏற்றப்படும் இடத்தில் போலீசார் ஆண்டுதோறும் பரிகார பூஜை மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காவல்துறை சார்பில் மலை உச்சியில் பரிகார பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் 10 நாள்களும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.. 1800 பேர் மீதான கிரிமினல் வழக்குகள்.. திரும்ப பெற தவெக அரசு உத்தரவு!

பக்தர்கள் பாதுகாப்புக்கு 500 கண்காணிப்பு கேமராக்கள்

7- ஆம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வீதி உலா வர உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை வரும் பக்தர்கள் பாதுகாப்பு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை

கோவில் வளாகம், மாடவீதி, கிரிவலப் பாதை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சுமார் 500- க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு கருவி கோவில் வளாகம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் பேர் ஆகியவற்றில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: தூய சக்தி என்று சொன்னால் மட்டும் போதாது.. மாற்றம் என்பது நிர்வாக சீர் திருத்தத்தில் இருக்க வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு வானதி கிளாஸ்!

Follow Us