AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெரிய திட்டத்தில் இணையும் சூர்யா – தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?

Suriya And Dhanush Collaboration: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருந்துவருபவர்கள் சூர்யா மற்றும் தனுஷ். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் பேக் டூ பேக் பிரம்மாண்ட படங்களை தங்களின் கைவசம் வைத்துள்ளனர். அந்த விதத்தில் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

பெரிய திட்டத்தில் இணையும் சூர்யா – தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?
சூர்யா மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 11:31 AM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நடிகர்களாக இருந்துவருபவர்கள் சூர்யா (Suriya) மற்றும் தனுஷ் (Dhanush). இவர்கள் இருவருமே தமிழில் தொடர்ந்து புது புது திரைப்படங்களில் பணியற்றவருகிறார்கள் சூர்யாவின் நடிப்பில் இதுவரை மொத்தம் 46 படங்களே வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பிறகு சினிமாவில் நுழைந்த தனுஷ் 55 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் முக்கியமான தூண்களாக இருந்துவருகின்றனர். சமீபத்தில் சீன் திரைப்படத்தின் (Scene Movie) ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த சூர்யா, தனுஷுக்கு நன்றி தெரிவித்திருந்தார். சீன் படத்தின் ரிலீஸ் காரணமாக ஓம் படத்தின் (Om Movie) ரிலீஸை தள்ளிவைத்ததற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவந்தது. அந்த விதத்தில் இந்த இரு நடிகர்களும் ஒரே கூட்டணி படத்தில் இணைவதாக இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் சேவ் செய்த டிடிஃஎப் வாசன்.. முத்தழகி – கரீஷ்மா இருவரில் வெளியேறுவது யார்?

சூர்யா மற்றும் தனுஷ் கூட்டணி திரைப்படம்:

விரைவில் உருவாக்கவுள்ள புதிய மற்றும் பிரம்மாண்ட திட்டத்தில் சூர்யா மற்றும் தனுஷ் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம், சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் நடிக்கும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் இரண்டு கதாநாயகர்களைக் கொண்ட ஒரு கதையை உருவாக்கியுள்ளதாகவும், சமீபத்தில் அந்தத் திட்டத்தில் இரு நடிகர்களையும் நடிக்க வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!

இயக்குநர் மணிரத்னம் இந்தப் படம் குறித்து சூர்யா, தனுஷ் இருவரையும் அணுகியதாகவும், இரு நடிகர்களும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. அது உண்மையானால் விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என வட்டாரங்கள் கூறுகிறது.

தனுஷ் மற்றும் சூர்யா கூட்டணி படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தனுஷ் மற்றும் சூர்யா இருவருமே தங்களின் கைவசத்தில் பல படங்களை வைத்துள்ளனர். அதிலும் தனுஷ் பேக் டூ பேக் கிட்டத்தட்ட 7 படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். அந்த வகையில் இந்த தகவல் உண்மையானால் இவர்கள் இருவரின் கூட்டணி திரைப்படம் குறித்த தகவல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மணிரத்தினம் இஞ்சி வெள்ளம் படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின் இந்த திட்டம் தொடங்கலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us