AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நக்கலாக பேசிய முனியம்மாளிடம் ஆநாகரீகமாக நடந்துகொள்ளும் ஜேசன் – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ!

Muniyammal - Jason Clash: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது தற்போது 9வது வாரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலே முனியம்மாள் மற்றும் ஜேசன் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

நக்கலாக பேசிய முனியம்மாளிடம் ஆநாகரீகமாக நடந்துகொள்ளும் ஜேசன் – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ!
ஜேசன் மற்றும் முனியம்மாள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 10:31 AM IST

சின்னத்திரையில் மக்களால் அதிகமாக விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியானது 8 வாரங்களை கடந்து தற்போது 9வது வாரத்தில் உள்ளது. நேற்று (01/11/2026) நடந்த எவிக்ஷனில் கரீஷ்மா வெளியேற்றப்பட்டிருந்தார். மேலும் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) தனது எவிக்ஷன் ப்ரீ பாஸை வைத்து முகேஷை காப்பாற்றியிருந்தார். அந்த விதத்தில் இந்த செயலானது டிடிஃஎப் வாசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என கூறலாம்.

அந்த விதத்தில் இந்த ரூ (02/11/2026) வெளியான முதல் ப்ரோமோவில் முனியம்மாள் மற்றும் ஜேசன் இருவரிடையேயும் பிரச்சனை எழுந்துள்ளதுபோல காட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த ப்ரோமோ குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸ் மூலம் சேவ் செய்த டிடிஃஎப் வாசன்.. முத்தழகி – கரீஷ்மா இருவரில் வெளியேறுவது யார்?

9வது வாரத்தின் முதல் நாளிலே ஜேசன் மற்றும் முனியம்மாளிடம் எழுந்த பிரச்சனை:

இந்த ப்ரோமோவில், “அனைவரும் லிவ்விங் அறையில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தனர். அப்போது முனியம்மாள் ஜேசனை பார்த்து, அவர்தான் இந்த வீட்டின் பாஸ் போல என பேசியிருந்தார். உடனே ஜேசன் அவரை பார்த்து மெண்டல் என கூறியிருந்தார். இது முனியம்மாளை கோபத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், அவரும் பதிலுக்கு பதில் பேசத் தொடங்கியிருந்தார். மேலும் சாதிகா, ஜேசனிடம் நீங்க மெண்டல் என சொன்னது தவறு என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அண்ணிக்கு மரியாதை.. ஜோதிகாவின் சொல்பேச்சை கேட்ட கார்த்தி – வைரலாகும் வீடியோ!

ஜேசன் உடனே முனியம்மாள் நக்கலாக பேசினால், நானும் அப்படிதான் பேசுவேன் என கூறியிருந்தார். மேலும் ஜேசன் முனியம்மாளை சரமாரியாக கேள்வியை கேட்டு அவரிடமான சண்டையை மேலும் வலுப்படுத்திவந்தார். மேலும் அவரை பேசியது நடக்கவேண்டும், அவர் நினைத்துதான் நடக்கவேண்டும் என்று இருந்தாலே அவர் இந்த வீட்டின் பாஸாகதான் இருக்கனும் என முனியம்மாளும் ஈடுகொடுத்து பேசியிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 57வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் கரீஷ்மா வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த விதத்தில் இந்த வாரத்தில் பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் எந்தெந்த போட்டியாளர்கள் இருக்கிறார் என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. அந்த விதத்தில் இந்த 9வது வாரத்தில் வித்தியாசமான டாஸ்கிங் மூலம் மேலும் சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us