முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சேயோன் படக்குழு
Seyon Movie First Schedule Wrapped | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்பொபொது நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த படம் தாய் கிழவி. இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த தாய் கிழவி படம் சிவக்குமார் முருகேசனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது படத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பில் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவக்குமார் முருகேசன். தாய் கிழவி படத்தின் பணிகள் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.




முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சேயோன் படக்குழு:
இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வகாம அறிவித்துள்ளது. அந்த வீடியோ பதிவு தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பக்திமயத்தில் ரசிகர்கள்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வரும் புது சீரியல்.. வைரலாகும் புரோமோ!
சேயோன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From passion to progress#Seyon First Schedule Wrapped
#சேயோன்#VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh #BhagyashriBorse @RKFI @turmericmediaTM @raichalrabecca @Actor_ArulDass @bala_actor pic.twitter.com/daiiv22Nvh
— Raaj Kamal Films International (@RKFI) June 10, 2026
Also Read… கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சம்பவகாரி லிரிக்கள் வீடியோ