கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சம்பவகாரி லிரிக்கள் வீடியோ
Sambavakaari Lyrical Video From Gatta Kusthi 2 | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தில் இருந்து முதல் பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து பிரபல நாயகனாக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தின் முதல் பாகம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது.
இயக்குநர் செல்ல அய்யாவு இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 03-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா மற்றும் மோக்ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் இருந்து தற்போது முதல் சிங்கிள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.




கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சம்பவகாரி பாடல்:
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சம்பவகாரி என்ற பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் பாடலை ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் டீசர் எவ்வளவு டியூரேசன் – படக்குழு கொடுத்த அப்டேட்
கட்டா குஸ்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The first punch from @RSeanRoldan is here 🥊#GattaKusthi2 First single SAMBAVAKAARI out now.
🎙️ Sean Roldan, @singersaindhavi.
✍️ @Lyricist_MohanGet set for the family entertainment in theatres, on July 3rd!
Produced by @VelsFilmIntl &… pic.twitter.com/1HzSdIy026
— Vels Film International (@VelsFilmIntl) June 9, 2026
Also Read… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா!