Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அந்த வயசுக்கு இந்த உலகத்துல எதைப் பத்தியும் கவலை இல்லை… வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Selvaraghavan Instagram Post: சினிமாவில் தனது இயக்கத்தில் வெளியான படங்கள் மூலமாகவும், நடிப்பில் வெளியான படங்கள் மூலமாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் செல்வராகவன். அவ்வபோது சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வயசுக்கு இந்த உலகத்துல எதைப் பத்தியும் கவலை இல்லை… வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
தனது இளைய மகனுடன் செல்வராகவன்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2025 21:51 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக அறிமுகம் ஆனார் செல்வராகவன் (Selvaraghavan). கடந்த 2002-ம் ஆண்டு தனது தம்பி தனுஷ் நாயகனாக அறிமுகம் ஆக இவர் இயக்குநராக துள்ளுவதோ இளமை படத்தில் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அண்ணன் மற்றும் தம்பி இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி அண்ணன் இயக்குநராகவும் தம்பி நடிகராகவும் வெற்றிப் படங்களை கொடுத்து வந்தனர். தொடர்ந்து இயக்குநராக காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் செல்வராகவன். இதில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே கல்ட் படம் என்று கொண்டாடப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து படங்களை இயக்குவதில் இருந்து தற்போது விலகி இருக்கும் செல்வராகவன் நடிகராகப் பலப் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி 2022-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் காவல்க்துறை அதிகாரியக நடித்த செல்வராகவன் தொடர்ந்து சாணிக்காகிதம், நானே வருவேன், பாகாசூரன், ஃபர்கானா, மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த உலகத்துல எதைப் பத்தியும் கவலை இல்லை:

தொடர்ந்து தனது படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் செல்வராகவன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து உறவுகள், நட்பு, காதல் மற்றும் பிரிவு குறித்து சில பதிவுகளை வெளியிட்டு வருவார். அந்தப் பதிவுகளைப் பார்க்கும் ரசிகர்கள் எங்களுக்கு என்றே கூறுவது போல உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உடன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவரது சிறிய மகன் படுத்துக்கொண்டே கார் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வயசுக்கு உலகத்துல எதைப் பத்திய கவலையும் இருக்காது என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்? இயக்கப்போகும் மாஸ் இயக்குநர்.. புது தகவலால் அதிரும் கோலிவுட்!

செல்வராகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

Also Read… மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் அந்த பாலிவுட் நடிகருக்குதான் முதலில் சொன்னேன் – ஏ.ஆர்.முருகதாஸ்