Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mask Movie: கவினின் ‘மாஸ்க்’ பட முதல் சிங்கிள் எப்போது? புரோமோவுடன் வெளியான அறிவிப்பு இதோ!

Mask First Song Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்களும் உருவாகிவருகிறது. அந்த வகையில் வெற்றிமாறனின் தயாரிப்பில் நடித்துவரும் படம்தான் மாஸ்க். தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mask Movie: கவினின் ‘மாஸ்க்’ பட முதல் சிங்கிள் எப்போது? புரோமோவுடன் வெளியான அறிவிப்பு இதோ!
கவினின் மாஸ்க் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2025 22:34 PM IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின் (Kavin). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக கிஸ் (Kiss) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவந்தது. இந்த படத்தில் கவின் ரோமாண்டிக் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்தார். இந்த படமானது இவர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் கவின், வெற்றிமாறனின் (Vetrimaaran) தயாரிப்பில் நடித்துவரும் படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்ரம் அசோகன் (Vikram Asokan) இயக்கிவருகிறார்.

இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா ஜெரெமியா (Andrea Jeremiah) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்த ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவையாக வெளியான இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : பிரதீப் ரங்கநாதனின் குரலில்… ‘டியூட்’ படத்தின் ‘சிங்காரி’ பாடல் வெளியானது!

மாஸ்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு ப்ரோமோவை வெளியிட்ட கவின் :

மாஸ்க் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி :

கவினின் இந்த மாஸ்க் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலானாது “ஆலங்கட்டி” என்ற வரிகளில் தொடங்குகிறது. இந்த பாடலானாது கடந்த 2025 செப்டம்பர் 30ம் தேதியில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின் கரூர் விவகாரம் தொடர்பாக இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுக்க முடியாது – 6 வருடங்களை கடந்தது அசுரன் படம்

அதனை தொடர்ந்து புதிய ரிலிஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆலங்கட்டி என்ற மாஸ்க் பட முதல் பாடல் வரும் 2025 அக்டோபர் 6ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த முதல் பாடலை பாடகர் அந்தோணி தாசன் பாடியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. பாடல் ரிலீஸ் தேதி குறித்து, காமெடியாக வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

கவினின் புதிய படங்கள் :

நடிகர் கவின் இந்த திரைப்படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தண்டட்டி பட இயக்குநருடன் ஒரு படமும் மற்றும் கனா காணும் காலங்கள் தொடர் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கென் ராய் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.