Bigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முக்கிய மாற்றம்.. பிக் பாஸ் சீசன் 9 எப்படி இருக்கும்?
Bigg Boss Season 9 Changes : தமிழ் மக்களிடையே இந்த 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது, இன்று 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியில் ஆரம்பமாகிறது.

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்க கடந்த 2017ம் ஆண்டு முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay TV) வெளியாகும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியானது இதுவரை 8 சீசன்கள் தமிழில் வெளியாகியிருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 9 தமிழ் இன்று 2025 அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துவரும் நிலையில், இது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. மேலும் சமீபத்தில் இணையத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) நிகழ்ச்சியின் வீடு தொடர்பான வீடியோ ஒன்று லீக் ஆனது. அந்த வீடியோ தொடர்பாக இணையத்தில் பல்வேறு விமர்சனங்களும் எழுத்து வருகிறது
இன்று இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், மற்ற சீசன்களை காட்டிலும், மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசனில் இருக்கும் சில மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: துணை நடிகர் டூ பிக்பாஸ் தொகுப்பாளர்.. விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை
பிக் பாஸ் சீசன் 9 தமிழின் புதிய புரோமோ
ஆரம்பிக்கலாமா.. 😎 பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும். Bigg Boss Tamil Season 9 | Grand Launch – இன்று மாலை 6 மணிக்கு ..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/XA2Fm3xTni
— Vijay Television (@vijaytelevision) October 5, 2025
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் இருக்கும் மாற்றங்கள் என்ன?
கடந்த பிக் பாஸ் சீசன் 7 முதல், இந்த பிக்பாஸ் வீடானது 2 அணிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. கிட்சன் டீம் தனியாகவும், மற்ற ஹவுஸ்சமேட்ஸ் தனியாகவும் இருப்பது மாதிரியான அணி பிரிக்கப்பட்டிருந்தது. இது மக்களிடையே ஒரு வித்தியாசமான விஷயமாக இருந்தது. மேலும் கடந்த 2024ல் வெளியான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் ஆண்கள் தனி அணி மற்றும் பெண்கள் தனி அணியாக பிரிக்கப்பட்டு வேறு விதமாக இருந்தது. ஆனாலும் இது கொஞ்சநாள் வரைதான் நீடித்தது. சரியாக 50 நாட்களில் அனைவரும் சேர்ந்து விளையாடுவதுபோல அமைந்திருந்தது.
இதையும் படிங்க : ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!
மேலும் சமீபத்தில் வெளியான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் தொடர்பான வீடியோவில், படுக்கையறையில் இருந்து குளிக்கும் ஜக்கூஸியை ஓபனாக தெரியும் விதத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் படுக்கையறையில் வைத்திருக்கும் நிலையில், இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. அப்படி இந்த பிக் பாஸ் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.