வாட்டர் மெலன் திவாகரை கலாய்த்த ரசிகர்கள் – சட்டென கடுப்பான விஜய் சேதுபதி
Bigg Boss Tamil 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக யூடியூபில் பிரலமானவராக இருக்கும் வாட்டர் மெலன் திவாகர் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவரது அறிமுகம் போது ரசிகர்கள் கிண்டல் செய்த போது விஜய் சேதுபதி சட்டென்று கடுப்பாகியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி இன்று 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் இந்த 9-வது சீசனில் முதல் போட்டியாளராக யூடியூப் பற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமான வாட்டர்மெலன் திவாகர் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் படங்களில் பல முன்னணி நடிகர்களின் காட்சிகளை ரீ கிரியேட் செய்வதாக கூறி காமெடி செய்கிறார் என்று ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல முன்னணி நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் வரும் தர்பூசணி காட்சியை ரீ கிரியேட் செய்ததால் இவரை வாட்டர்மெலன் திவாகர் என்று மக்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சமூக வலைதளம் மூலம் மக்களிடையே பிரபலமான திவாகர் உண்மையிலேயே ஒரு பிசியோதெரபி டாக்டர் ஆவார். அதுகுறித்தும் அவர் அவ்வபோது பேசி வருகிறார். இந்த நிலையில் திவாகரை விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு வரவேற்றப்போது ரசிகர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே நடிப்பு அரக்கன் என்று கூறினர். அப்போது சட்டென்று நடிகர் விஜய் சேதுபதி முகம் மாறிய நிலையில் அது சில யூடியூப் சேனல்கள் செய்வது நாம் அதனை செய்யக் கூடாது என்று கூறினார்.




வாட்டர்மெலன் திவாகருக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி:
வாட்டர்மெலன் திவாகரின் அறிமுக வீடியோவைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி இருக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் தெரிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசாதீங்க என்றும் ஒரு அட்வைஸ் கூறினார்.
அப்போது விஜய் சேதுபதியிடம் நான் ஒரு தடவை நடித்துக் காட்டுகிறேன் என்று கூற உடனே விஜய் சேதுபதி இதைதான் சொன்னேன் நீங்க எல்லா இடத்துலையும் பன்றதையே இங்கையும் பன்னாதீங்க 100 நாள் முடிச்சுட்டு வந்து நடிச்சுக்காட்டுங்க என்று அட்வைஸ் கூறி வீட்டிற்குள் அனுப்பினார்.
திவாகர் குறித்த அறிமுக வீடியோவை வெளியிட்ட நிகழ்ச்சி குழு:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #WatermelonStar 😎
Bigg Boss Tamil Season 9 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason9 #TuneInNow #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV… pic.twitter.com/NMw4Ovjai6
— Vijay Television (@vijaytelevision) October 5, 2025