Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோலாகலமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி!

Bigg Boss Tamil Season 9: தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்ள உள்ளனர் என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

கோலாகலமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2025 18:18 PM IST

இந்தியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் தமிழில் ஒளிப்பரப்பானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் தமிழ் சீசன் 1 (Bigg Boss Tamil) முதல் தொடங்கி தற்போது வரை இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இன்று அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நடிகர் விஜய் சேதுபதி பேசியபோது ரசிகர்கள் அதனை ஆரவாரத்துடன் கொண்டாடித் தீர்த்தனர்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி இந்த செட்டு பிரமாண்டமாக இருப்பது போல ஆட்டமும் பிரமாண்டமாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மலை ஏறுவது போல என்று தெரிவித்த அவர் இந்த மலையை ஏறுவது அவ்வளவு ஈசியான விசயம் இல்லை என்றும் அந்த மலையின் உச்சியில் யார் செல்வார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடு எப்படி இருக்கு?

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடு மிகவும் கலர்ஃபுல்லாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது. இத்தனை சீசன்களாக இல்லாத அளவிற்கு இந்த சீசனில் வீடு மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு கிட்சன் இருந்த இடத்தில் தற்போது லிவிங் ரூம் உள்ளது.

மேலும் வீட்டின் நடுவே கிட்சன் ஏரியாவும் உள்ளது. இந்த சீசன் தொடங்கிய போதே ஒரு டாக் லைன் தொடர்ந்து கூறப்பட்டுக்கொண்டே வந்தது. அது பார்க்க பார்க்க தான் தெரியும் போக போகதான் புரியும். அதே போலதான் இந்த வீடும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் வீட்டில் உள்ள பெட்ரூமில் மொத்தமாக 12 படுக்கைகள் மட்டுமே உள்ளது. தொடர்ந்து தனியே ஒரு அமைக்கப்பட்டு இருக்கிறது. அது ஒவ்வொரு வாரமும் கேப்டனாக இருப்பவர்களுக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு படுக்கை அறை தனியாக உள்ளது. அது சூப்பர் டீலக்ஸ் ரூமாக உள்ளது. அதில் குளிப்பதற்கு ஜக்கூசி எல்லாம் உள்ளது. அந்த அறையில் இருப்பவர்கள் ராஜா வாழ்க்கை வாழ்வது போல இருக்கும். இந்த சீசன் கடந்த சீசன் போல ஆண்கள் விர்சஸ் பெண்கள் இல்லை என்பது போலவும் தோன்றுகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: