இது வேற கதை… வேற களம்… அருள்நிதியின் ராம்போ பட ட்ரெய்லர்
Rambo Movie Official Trailer: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக தற்போது இவரது நடிப்பில் ராம்போ படம் வெளியாக உள்ளது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான வம்சம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அருள்நிதி. இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன், மௌனகுரு, தகராறு, டீமாண்டி காலனி, ஆராது சினம், பிரிந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், தேஜாவு, கழுவேத்தி மூர்கன், டீமாண்டி காலனி 2 என நடிகர் அருள் நிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் அருள் நிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ராம்போ. இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமான கதைக்களத்தில் நடிகர் அருள் நிதி நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி உள்ளார். தொடர்ந்து கிராமத்து கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி வந்த இயக்குநர் முத்தையா தற்போது பாக்ஸிங் என்ற புதிய கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.




நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அருள் நிதியின் ராம்போ படம்:
இந்த நிலையில் நடிகர் அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை தன்யா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அபிராமி, விடிவி கணேஷ் மற்றும் பலரி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக வருகின்ற 10-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம்போ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
No mercy. No limits. No escape. Fury has a name… and it’s RAMBO.
Arulnithi is RAMBO. Raw, Relentless, and Unstoppable.Trailer out now.
🎬 Premieres Oct 10 | Only on SunNXT#DirectToOTT #RamboOnSunNXT #SunNXTExclusive #TamilMoviePremiere #FightForTruth #Arulnithi… pic.twitter.com/CRlyyUnTaP— SUN NXT (@sunnxt) October 4, 2025
Also Read… சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய படக்குழுவினர்