Diesel Movie: ஹரிஷ் கல்யாணின் அதிரடி கதைக்களத்தில்.. ‘டீசல்’ படத்தின் புதிய பாடல் வெளியானது!
Diesel Movie Song: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் டீசல். இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியான நல்ல வரவேற்பை பெற்றநிலையில், இன்று 3வது பாடலான ஆருயிரே என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பிரம்மாண்ட இயக்குநர்களுடன் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி (Shanmugam Muthusamy) இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம்தான் டீசல் (Diesel). இந்த படமானது கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஷூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு மீதி காட்சிகளும் எடுத்துமுடிக்கப்பட்டநிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவந்தது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Atulya Ravi) நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திற்கிருந்து பீர் மற்றும் தில்லுப்பாரு ராஜா போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மேலும் மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்படத்திலிருந்து ஆருயிரே (Aaruyire) என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க : முதலில் இட்லி கடை படத்தில் நான் நடிக்க ஒத்துக்கல – நித்யா மேனன்!
ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தில் இருந்து வெளியான ஆருயிரே பாடல்:
Your new favorite kaadhal paatu 💗#Diesel third single #Aaruyire out now. A @dhibuofficial musical.
Fueling up the big screens from the 17th of October 🔥 #DieselDiwali@iamharishkalyan @AthulyaOfficial @shan_dir @ThirdEye_Films pic.twitter.com/1hXSoK6H6T
— Third Eye Entertainment (@ThirdEye_Films) October 3, 2025
டீசல் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவியின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்பி சினிமாஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த நிலையில், மக்களிடேசியே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: தேசிய விருது தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்!
அதுபோல இந்த டீசல் படமும் அந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது வரும் 2025 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 3 பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரிஷ் கல்யாணின் புதிய படம்
இந்த டீசல் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் தற்காலிகமாக HK15 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார். இந்த படமானது வட சென்னை பகுதியை அடிப்படையாக கொண்ட கதைக்களமாக உருவாகிவருகிறதாம். மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.