Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!

2 Years Of Irugapatru Movie: தமிழ் சினிமாவில் உறவுகளை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்ற வருகின்றது. அதில் குறிப்பாக கணவன் மனைவி உறவை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!
இறுகப்பற்று படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2025 20:43 PM IST

தமிழ் சினிமாவில் கடனத 06-ம் தேதி அக்டோபர் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இறுகப்பற்று (Irugapatru Movie). இந்தப் படத்தை இயக்குநர் யுவராஜ் தயாளன் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்த இறுகப் பற்று படத்தில் நடிகர்கள் ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், விக்ரம் பிரபு, அபர்நதி, சானியா ஐயப்பன், மனோபாலா, மை பா நாராயணன், ரெட்ஜெயன்ட் சுப்ரமணி, பசி சத்யா, டிங்கு, சாப்ளின் சுந்தர் என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… குறட்டையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ

இறுகப்பற்று படத்தின் கதை என்ன?

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் சின்ன சின்ன மனக் கசப்பு எப்படி எல்லாம் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது என்பதை இந்த இறுகப்பற்று படத்தின் மூலம் இயக்குநர் யுவராஜ் தயாளன் மிகவும் அழகாக காட்டியிருப்பார்.

திருமணத்தில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கையும் பாசமும் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக இந்தப் படம் அமைத்து இருந்தது. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் மற்றும் விக்ரம் பிரபு ஒரு தம்பதியாகவும்,  ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஒரு தம்பதியாகவும், விதார்த் மற்றும் அபர்நதி ஒரு தம்பதியாகவும் நடித்து இருந்தனர்.

இவர்களின் திருமண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களை இவர்கள் எவ்வாறு அனுகி அதனை சரி செய்து தங்களது திருமண வாழ்க்கையை தக்கவைத்துக் கொண்டனர் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் அப்டேட்