கிஸ் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்த நெல்சன் திலீப் குமார்
Actor Kavin: நடிகர் கவின் நடிப்பில் ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வரும் படம் கிஸ். இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் முதல் ஜெயிலர் படங்கள் வரை அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சமீபத்தில் நடிகர் கவினின் நடிப்பில் வெளியான கிஸ் படம் குறித்து பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிஸ். நடன இயக்குநரான இவர் தற்போது இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் கவின் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். படம் நேற்று 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகின்றது.




கிஸ் படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட நெல்சன் திலீப் குமார்:
இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கிஸ் படத்திற்கு அமோக வரவேற்பு மக்களிடம் கிடைப்பதாக அறிந்தேன். என் நண்பர்கள் குழு இந்த வெற்றியைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் சதீஷ் மற்றும் படத்தின் ஹீரோ கவின் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Hearing great response for the movie #kiss very happy for my friends super hit success 😍💐@dancersatz @Kavin_m_0431 @PreethiOffl @mynameisraahul and team 💐💐
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 20, 2025
Also Read… நிலவையே கொடுப்பதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமட்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்