AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!

South Indian Actress Childhood Photo: நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது பரவிவருகிறது. அந்த விதத்தில் இந்த போட்டோவில் கிருஷ்ணன் வேடத்தில் இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!
நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Apr 2026 08:46 AM IST

சமூக ஊடகங்களில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரின் சிறுவயது மற்றும் அடையலாமே தெரியாத புகைப்படங்கள் வைரலாக பரவிவருவது வழக்கம். அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் கிருஷ்ணன் கெட்அப்பில் (Krishnan), ஒரு பெண்ணின் கையில் இருக்கும் அந்த கியூட் சிறுமி யாருனு தெரியுமா?. இந்த நடிகை மராத்திய நடிகை. இவர் ஆரம்பத்தில் சீரியலில் நடிகையாக (Serial Actress) நடித்திருந்தார். இவர் நடித்த இந்தி சீரியல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவர் இதுவரை குறைவான படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் இவரின் நடிப்பிற்கு வரவேற்பு இருக்கிறது. இவர் நடிகர்கள் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) மற்றும் நானியுடன் (Nani) ஜோடியாக படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களே இவருக்கு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை வாங்கி கொடுத்தது. அந்த வகையில் இவர் நடிகர் தனுஷை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டவர். இப்போது இந்த நடிகை யார் என தெரிந்திருக்கும். இவர் சீதா மகாலெட்சுமி மற்றும் யஷ்னா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை கொள்ளைகொண்ட நடிகை மிருணாள் தாக்கூர்தான்.

இதையும் படிங்க: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?

நடிகை மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

நடிகை மிருணாள் தாக்கூர் மராத்திய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் படங்களில் சிறுசிறு வேடங்களில் இவர் நடித்துவந்தார். அதன் பிறகு சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவரின் இனிய இரு மலர்கள் என்ற சீரியல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த விதத்தில் இந்தி சினிமாவின் மூலமா நடிகையக நுழைந்த இவர், தற்போது தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: பிரசாந்த் கூட அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை – மனம் திறந்த தேவயானி

இவர் சீதா ராமம், ஹாய் நன்னா போன்ற படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களிடையே பிரபலமானார். இந்த படங்களை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் படலம் அதிகரித்தது. இவர் இன்னும் தமிழ் மொழியில் படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் மொழியை பல்வேறு இடங்களில் பேசி தமிழிலும் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவர் சிலம்பரசனுடன் STR51 படத்தில் ஜோடியாக நடிப்பதற்கு பேசப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us