AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யாருனு தெரிகிறதா? சீரியல் டூ பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. தற்போது சினிமாவில் நடிகை!

Serial Actress Childhood Photos: தமிழில் அவ்வப்போது நடிகைகள் சிலரை சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத போட்டோஸ் வைரலாகிவருவது உண்டு. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா? அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யாருனு தெரிகிறதா? சீரியல் டூ பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. தற்போது சினிமாவில் நடிகை!
நடிகையின் சிறுவயது புகைப்படம் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 04 Apr 2026 08:42 AM IST

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபல சினிமா நடிகைகள் (Cinema Actress) மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகைகளின் (Serial Actress) சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கம். அந்த விதத்தில் மேலே இருக்கும் நபர் ஒருவரின் கையில், மிகவும் கியூட்டாக இருக்கும் சிறுமி யார் தெரியுமா?. இவர் தமிழில் சீரியல்களில் நடிகையாக நடித்துவந்தவர். சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இவர். இவர் கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டில் வெளியாகிய ராஜா ராணி சீசன் 2 சீரியலில் (Raja rani 2 Serial) நடித்துவந்தார். பின்னர் பாரதி கண்ணம்மா, தேன்மொழி பி.ஏ. போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் (Bigg Boss) போகும் வாய்ப்பும் கிடைத்தது.

பின்னர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்து, டைட்டில் வின்னர் ஆனவர். இப்போது இந்த போட்டோவில் இருப்பவர் யார் என தெரிந்திருக்கும். இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி வேறுயாருமில்லை, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் அர்ச்சனா ரவிச்சந்திரன்தான்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்

நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரனின் போட்டோஷூட் இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் விஜே-வாக பணியாற்றிவந்தார். பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால், விஜய் தொலைக்காட்சியில் கடந்தஹ் 2021 – 2022ம் ஆண்டில் வெளியான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலிலும் நடித்திருந்தார். தொடர்ந்து சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இதையும் படிங்க: தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் – நடிகர் பரத் ஓபன் டாக்

அந்த விதத்தில் இவருக்கு மக்களிடையே மிகவும் நெருக்கத்தை கொடுத்தது பிக் பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து, பல சண்டைகளை கடந்து டைட்டில் வின்னராக வெற்றிபெற்றிருந்தார். இதையடுத்து டிமாண்டி காலனி 2 படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இதையடுத்து டிமாண்டி காலனி 3 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அவரின் இனி நடிகர் அருண் பிரசாந்த் என்பவரை காதலித்துவந்த நிலையில், இருவருக்குமே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

Follow Us