தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் – நடிகர் பரத் ஓபன் டாக்
Actor Bharath Recent Interview Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் பரத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் திருவிளையாடல் ஆரம்பம். இயக்குநர் பூபதி பாண்டியன் இந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், டி.எஸ்.பி.கே.மௌலி, இளவரசு, மயில்சாமி, கிரேஸ் கருணாஸ், கார்த்திக் கண்ணையன், காதல் சுகுமார், வர்ணிகா, பசி சத்யா, மீனா குமாரி, கிருஷ்ணமூர்த்தி, சிங்கமுத்து, கடுகு ராமமூர்த்தி, பயில்வான் ரங்கநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் காமெடிகள் தற்போது உள்ள இளைஞர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் பரத் சமீபத்தில் இந்தப் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகினது.




தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும்:
அந்த வகையில் இன்று நடிகர் பரத்தின் நடிப்பில் உருவாகி உள்ள காளிதாஸ் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் பூபதி பாண்டியன் திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்காக தன்னைதான் முதலில் நாடினார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பிப்ரவரி 14 படத்தில் நடித்து கொண்டு இருந்ததாலும் வேறு சில காரணங்களாலும் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அது என் சினிமா கெரியரில் மிகப்பெரிய லாஸ் என்று பரத் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் பையா படம்… கொண்டாடும் படக்குழு
இணையத்தில் வைரலாகும் பரத்தின் பேச்சு:
#Bharath Recent
– I missed the chance to act in Thiruvilaiyaadal Aarambam because I was working on Feb 14 Movie at that time.
– Dir Boopathy Pandian came and narrated the story to me, but for some reason I couldn’t do the film.pic.twitter.com/KW5rObM8X5— Movie Tamil (@_MovieTamil) April 2, 2026
Also Read… மலையாள சினிமாவில் ஹிட் அடித்த சத்தா பச்சா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ