AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் பையா படம்… கொண்டாடும் படக்குழு

16 Years Of Paiyaa Movie: நடிகர்கள் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பையா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் பையா படம்… கொண்டாடும் படக்குழு
பையாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Apr 2026 20:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 02-ம் தேதி ஏப்ரல் மாதம் 2010-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பையா. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ரொமாண்டிக் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா பாட்டியா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிலிந்த் சோமன்,
ஜெகன், சோனியா தீப்தி, ஜாஸ்பர், உமர் லத்தீப், தர்ஷன் ஜரிவாலா, சுஜாதா குமார், புனித் தேஜ்வானி, அர்பித் ரங்கா, ராஜ்குமார் கனோஜியா, டேனியல் அன்னி போப், பாபு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி ப்ரதர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் என். சுபாஷ் சந்திர போஸ் மற்றும் என்.லிங்குசாமி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் பையா படம்:

இந்தப் படத்தில் எதிர்பாராத நேரத்தில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் ஒரு கார் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்திற்கு முன்னதாக கார்த்தி தமன்னாவை பார்த்து காதலிக்க தொடங்கி விடுவார். அந்தப் பெண் யார் என்று தேடிக்கொண்டு இருந்த போதுதான் அந்த பயணம் ஏற்படுகிறது. அந்த பயணத்தில் இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… Kavin: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!

பையா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தல பதிவு:

Also Read… Durai Senthilkumar: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு – அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!

Follow Us