லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படம் குறித்து சூப்பர் அப்டேட்டை கொடுத்த ரத்னகுமார்
Director Rathnakumar talks about the AA 22 Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ரத்னகுமார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேடியபோது அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் ஹிட் கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது ரொமாண்டிக் காமெடி பாணியில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 29. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று 01-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு மேன்சன் குத்து என்ற பாடல் 29 படத்தில் இருந்து வெளியானது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் முந்தையப் படங்களைப் போல சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இயக்குநர் ரத்னகுமார் தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இறி படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருகிறார். அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பலவற்றிற்கு திரைக்கதை மற்றும் வசங்கள் எழுதும் பணிகளை மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




லோகேஷ் – அல்லு அர்ஜுன் படம் குறித்து அப்டேட்டை கொடுத்த ரத்னகுமார்:
இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் ரத்னகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைய உள்ள படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தப் படத்தின் திரைக்கதை எழுதும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கும் என்றும் அதில் தானுக் கலந்துகொள்ள உள்ளதாகவும் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா – வைரலாகும் பதிவு
இணையத்தில் வைரலாகும் ரத்னகுமார் பேச்சு:
I’m currently working with #LokeshKanagaraj as a writer for #AA22 the writing ✍️ process will continue next week as well
– #RathnaKumar (Director of #MeyyadhaMann, #Aadai
Writer of #Master, #Leo, #Vikram)
pic.twitter.com/1esMszxibN— Movies Singapore (@MoviesSingapore) April 1, 2026
Also Read… மகாநதி படத்தில நடிச்ச போது நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தேன் – நடிகை சங்கீதா ஒபன் டாக்