AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்தி போடு – 5 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் சுல்தான் படம்

5 Years Of Sulthan Movie: நடிகர் கார்த்தியின் நடிபில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சுல்தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்தி போடு – 5 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் சுல்தான் படம்
சுல்தான் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Apr 2026 16:33 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சுல்தான் இந்தப் படத்தினை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதன்படி நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம், ராமச்சந்திர ராஜு, லால், நெப்போலியன், அபிராமி, நவாப் ஷா, மாபெரும் சன்ஜீர், பொன்வண்ணன், யோகி பாபு, சதீஷ், பைகார காளயன், ஹரீஷ் பேரடி, எம்.எஸ்.பாஸ்கர், அர்ஜய், சிங்கம்புலி, மயில்சாமி, நாகிநீடு, சென்ட்ராயன், சரத் ​​குமார், ஜி.மாரிமுத்து, ராமா, சரத் ​​ரவி, செந்தி குமாரி, எம்.காமராஜ், சங்கீதா வி, ராஜா ராணி பாண்டியன், பிரபு, நமோ நாராயணா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

5 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் சுல்தான் படம்:

நடிகர் கார்த்தியின் அப்பாவான நெப்போலியன் இந்தப் படத்தில் ஒரு பெரிய தாதாவாக இருப்பார். இவருக்கு கீழா பல ரௌடிகள் வேலை செய்து வருவார்கள். மொரட்டு தனமான ரௌடிகளுக்கு இத்தனை நல்ல குணங்கள் இருக்கிறதா என்பதை இந்தப் படத்தைப் பார்க்கும் போதுதான் தெரியவரும்.

இதில் கார்த்தியின் தந்தை நெப்போலியன் உயிரிழந்துபோல தனது அப்பாவின் தொழில் பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் எனப்தற்காக அதனைச் செய்ய தொடங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Also Read… தனுஷின் கர படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சுல்தான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 29 படத்திலிருந்து மேன்சன் குத்து பாடலை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்

Follow Us