KHxRK போன்ற ஒரு படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் – அனிருத்
Anirudh talks about KHxRK Movie: பான் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் KHxRK என்ற படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இவர் இசையமைக்கும் போது மிகவும் இளமையாக இருததால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அவரை திரும்பிப் பார்த்தது. மேலும் அந்தப் படத்தில் வெளியான ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக இருந்த அனிருத் ரவிச்சந்தர் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறார்.
தொடர்ந்து பான் இந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் அவ்வபோது பேட்டிகளையும் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அனிருத் அளித்தப் பேட்டியில் KHxRK என்ற படத்தின் பணியாற்றுவது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




KHxRK படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம்:
அந்தப் பேட்டியில் அனிருத் பேசியதாவது, KHxRK போன்ற இத்தகைய பிரம்மாண்டமான ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு மிகவும் சிறப்பானதொரு தருணமாகும்; இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். இதன் செயல்முறை, நாங்கள் வேறு எந்தவொரு திரைப்படத்திற்கும் செயல்படுவது போலவேதான் உள்ளது; நாங்கள் சென்று, அந்தச் செயல்முறையை முழுமையாக ரசித்து மகிழ்கிறோம் என்றும் அனிருத் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் அனிருத் பேச்சு:
#Anirudh about #KHxRK 💥
– It is a special moment for us to be a part of such a huge project; they both are setting an example for the rest.
– The process is just the same as how we do any other film, we just go and enjoy the process.#Nelsonpic.twitter.com/YRcIhaMI3F— Movie Tamil (@_MovieTamil) April 14, 2026