AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?

GV Prakash Teams Up with Joe Director: தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகர்கவும் பிரபலமானவர்தான் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தொடர்ந்து புது படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது ஜோ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
ஜோ பட இயக்குநருடன் புது படத்தில் ஜி.வி. பிரகாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Apr 2026 19:04 PM IST

நடிகர் ஜி.வி. பிரகாஷ் (GV Prakash) நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 26 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியாகிய படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இதை அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியிருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஹேப்பி ராஜ் படத்திற்குதான் நல்ல வரவேற்பு இருந்தது என்று கூறலாம். இந்த படத்தை அடுத்தாக சில புதிய படங்களிலும் இவர் நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் ரியோ ராஜ் (Rio Raj) நடிப்பில், கடந்த 2023ம் ஆண்டில் வெளியான “ஜோ” (Joe) பட இயக்குநர் ஹரிஹரன் ராம் (Hariharan Ram) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக கூறப்பட்டுவந்தது.

அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 14ம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த படமானது கிரிக்கெட் மற்றும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ராத்து ராசன் இவன்…. சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!

ஜோ பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைவது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:

கடந்த 2023ம் ஆண்டில் ரியோ ராஜ் மற்றும் மலையாள நடிகை மாளவிகா மனோஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் ஜோ. இப்படமானது முற்றிலும் காதல் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் புது படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, ஜோ பட நடிகை மாளவிகா மனோஜ்தான் நாயகியாக நடிக்கிறார். இதை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். அந்த வகையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2027ம் ஆண்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us