AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்

19 Years Of Unnale Unnale Movie : தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் உன்னாலே உன்னாலே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
உன்னாலே உன்னாலேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Apr 2026 18:48 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது நாயகன், வில்லன் மற்றும் சிறப்பு கதாப்பாத்திரம் என தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் வினை. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வினை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் உன்னாலே உன்னாலே. நடிகர் வினை நாயகனாக இந்தப் படத்தில் நடித்து இருந்தார். மேலும் இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் வினை உடன் இணைந்து நடிகர்கள் சதா, தனிஷா, ராஜு சுந்தரம், ஸ்ரீநாத், சதீஷ், உமா பத்மநாபன், வசுந்தரா காஷ்யப், சித்தார்த் சந்திரசேகர், தேவன், அரவிந்த் ஆகாஷ், பலோமா, ஜப்பான் குமார், லேகா வாஷிங்டன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குரிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்:

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். ரொமாண்டிக் காமெடிப் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நாயகன் மற்றும் நாயகி காதலில் இருக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தொடர்ந்து இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியானதா அவர்கள் காதலில் ஜெயித்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… சூர்யாவின் கருப்பு பட தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. அட இத்தனை கோடிகளுக்கா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃபேண்டசி காமெடி த்ரில்லர் பாணியில் வெளியாகி உள்ள இந்த காக்கி சர்க்கஸ் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Follow Us