AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபேண்டசி காமெடி த்ரில்லர் பாணியில் வெளியாகி உள்ள இந்த காக்கி சர்க்கஸ் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Fantasy-Comedy Thriller Web Series Kaakee Circus Review Here: தமிழ் சினிமாவில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடர் காக்கி சர்க்கஸ். இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபேண்டசி காமெடி த்ரில்லர் பாணியில் வெளியாகி உள்ள இந்த காக்கி சர்க்கஸ் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
காக்கி சர்க்கஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 19:14 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருவது போல இணையதள தொடர்களும் தொடர்ந்து உருவாகி வெளியாகி வருகின்றது. சமீப காலமாக இணையதள தொடர்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றது. மேலும் ஓடிடி தளங்கள் அவர்களே இணையதள தொடர்களை தயாரித்து நேரடியாக தங்களது ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான காட்டான் என்கின்ற முத்து இணையதள தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஃபேண்டசி காமெடி த்ரில்லர் பாணியில் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடர் தான் காக்கி சர்க்கஸ்.

இந்த காக்கி சர்க்கஸ் தொடரை இயக்குநர் அமீர் பரீஃப் எழுதி இயக்கி உள்ள நிலையில் இந்த இணையதள தொடரில் நடிகர்கள் சுபாஷ் செல்வம், முனிஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி, வின்சு ராச்சே, சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா, சித்திரசேனன் என பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த காக்கி சர்க்கஸ் சீரிஸ் எப்படி இருக்கு?

ஒரு சப் ஜெயிலில் நடைப்பெற்ற திருட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த காக்கி சர்க்கஸ் படம். அதன்படி குற்றவாளிகள் அனைவரும் புத்தகம் படித்தால் திருந்திவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜெயிலர் முனிஷ்காந்த் மற்றும் இளம் ரத்ததின் வேகத்துடன் அடி உதவுவது போல வேற எதுவும் உதவாது என்ற எண்ணத்தில் இருக்கும் ப்ரிசன் ஆபிசர் சுபாஷ் செல்வத்தை சுற்றியே இந்த தொடரின் கதை அமைந்துள்ளது.

அதன்படி அந்த சப் ஜெயிலில் ஒரு நம்பிக்கை உள்ளது. அங்கு உள்ள கண்ணகி தேவி சாமி உண்டியலில் உள்ளே வரும் குற்றவாளிகள் அனைவரிடமும் காசு போட சொல்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே தவறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த உண்டியல் நிறைந்ததும் கேரளாவில் உள்ள கண்ணகி தேவி கோவிலுக்கு அனுப்பப்படுகின்றது.

Also Read… கருப்பு படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

இப்படி இருக்கும் நிலையில் சப் ஜெயிலில் உள்ள அந்த கோவில் உண்டியலில் உள்ள பணத்தை யாரோ கொள்ளை அடித்துவிடுவார்கள். ஜெயிலுக்குள்ளேயே கொள்ளையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போது முனிஷ்காந்த் மற்றும் சுபாஷ் ஆகியோருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. இறுதியில் உண்மையாக திருடனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இந்த தொடரின் கதை. இது தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… தலைவர் 173 படத்தை இயக்குவதில் இருந்து விலகினாரா சிபி சக்ரவர்த்தி – வைரலாகும் தகவல்

Follow Us