AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் கருப்பு பட தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. அட இத்தனை கோடிகளுக்கா?

Karuppu Movie TN Theatrical Rights: நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கருப்பு. இப்படத்தில் நடிகர் சூர்யா லீட் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் கருப்பு பட தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. அட இத்தனை கோடிகளுக்கா?
கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Apr 2026 19:11 PM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் முற்றிலும் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கருப்பு (Karuppu). இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, கடந்த 2024ம் ஆண்டிலே படம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் சூர்யா45 என இப்படமானது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தின் டைட்டிலையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவருமே வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது நீதிக்காக்கும் கருப்பசாமியின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்

கருப்பு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் மற்றும் விநியோக வருமானம்:

சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணி படமான கருப்பு படத்திற்கு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இவரின் இசையில் இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் ஹரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நடிகர் பிரசாந்த்

இந்நிலையில் கிட்டத்தட்ட ரூ 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பெற்றுள்ளதாம். தமிழகர் ரிலீஸ் உரிமையை கருப்பு படம் ரூ 37 கோடிகளுக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவின் நடிப்பில் சமீப ஆண்டுகளில் வெளியான படங்களை விடவும், கருப்பு திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை அதிக பிணத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பற்றி வைரலாகும் பதிவு:

இந்த கருப்பு படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இதன் இசைவெளியீட்டு விழா அவரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியில், மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு கருப்பு பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us