குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்
35 Years Of En Rasavin Manasile Movie | நடிகர்கள் ராஜ்கிரன் மற்றும் மீனா நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் என் ராசாவின் மனசிலே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீனா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ் சந்தர், சாரதா ப்ரீதா, ஸ்ரீவித்யா, நம்பிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, டப்பிங் ஜானகி, கே.எஸ்.ஜெயலட்சுமி, மனோகர், ராம்போ ராஜ்குமார், பங்கஜமாக பபிதா, சாமிக்கண்ணு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராஜ்கிரன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்:
தனது கிராமத்தில் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு முரட்டுதனமான ஆண் தான் ராஜ்கிரன். இவரக்கு தனது முறைப்பெண் மீனா மீது காதல் இருக்கிறது. அவரை திருமணம் செய்ய நினைக்கிறார். மீனாவின் கதாப்பாத்திரமோ மிகவும் சாந்தமான ஒன்று. நேர் எதிரான இவர்களின் குணங்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 35-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
ஏப்ரல் 13 #EnRasavinManasile
ராஜ்கிரண், மீனா, வடிவேலு நடித்த ‘என் ராசாவின் மனசிலே…’ என்ற படம் திரைக்கு வந்து இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது. இளையராஜா இசை அமைத்தார்.#Rajkiran #Vadivelu #Meena #ActressMeena #35YearsOfEnRasavinManasile pic.twitter.com/QxLelvtkB3
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) April 12, 2026