AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10 ஆண்டுகளைக் கடந்தது தெறி படம்… நன்றி தெரிவித்து எக்ஸ் பதிவிட்ட அட்லி

10 Years Of Theri Movie: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து உள்ளார். அதில் ஒன்றுதான் தெறி படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் அட்லி நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளனர்.

10 ஆண்டுகளைக் கடந்தது தெறி படம்… நன்றி தெரிவித்து எக்ஸ் பதிவிட்ட அட்லி
தெறிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Apr 2026 16:03 PM IST

பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பணியைத் தொடங்கினார் அட்லி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி அடுத்தடுத்து நடிகர் தளபதி விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கினார். அதில் முதலாவதாக இயக்குநர் அட்லி நடிகர் விஜயை வைத்து இயக்கிய படம் தான் தெறி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். ஆக்சன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜயின் ஜோடியாக நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்து இருந்தார். மேலும் நடிகர் தளபதி விஜயின் அம்மாவா நடிகை ராதிகா சரத்குமார் நடித்து இருந்த நிலையில் நடிகை மீனாவின் மகள் நைனிகா படத்தில் நடிகர் விஜயின் மகளாக அசத்தி இருப்பார். விஜய் மற்றும் நைனிகாவின் காம்போ இந்தப் படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளைக் கடந்தது தெறி படம்:

இந்த தெறி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேசன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தெறி படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த எக்ஸ் தள பதிவை ரீ ஷேர் செய்து நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு இயக்குநர் அட்லி நன்றிட் தெரிவித்து உள்ளார். அந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்

இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இருமுகன் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் விக்ரம்? இசையமைப்பாளர் இவர்தான்!

Follow Us