பிரதீப் ரங்கநாதனின் LIK பட முதல் நாள் வசூல்?.. ரசிகர்களுக்கு இயக்குநர் கொடுத்த எச்சரிக்கை!
LIK Movie 1st Day Collection: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கதைக்களத்தில் வெளியாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து பதிவையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) கூட்டணியில் தயாராகியிருந்த திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா (Sj Suryah), கிரித்தி ஷெட்டி (Krithi Shetty), சீமான் (Seeman), கௌரி ஜி கிஷன் என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகை கிரித்தி ஷெட்டியும் இணைந்து நடித்திருந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதியில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், முதல் நாளில் இப்படம் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படமானது முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 7.2 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் உலகளவில் ரூ10 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் எப்போது? – தேதியை அறிவித்த சாய் அபயங்கர்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Day 1 TN – 7.2cr GBOC 💥
An @anirudhofficial musical 🎵
A #Wikki original
#LIK #LoveInsuranceKompanyStarring @pradeeponelife @IamKrithiShetty @iam_SJSuryah @Gourayy @iYogiBabu@dop_ravivarman @PradeepERagav @muthurajthangvl @PeterHeinOffl @PraveenRaja_Off… pic.twitter.com/nsKdYxXLbC
— Seven Screen Studio (@7screenstudio) April 11, 2026
ரசிகர்களை எச்சரித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் :
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. எதிர்காலத்தில் ஒரு காதல் இவ்வாறுதான் இருக்குமா? என நம்மை யோசிக்கவைக்கும் விதத்தில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது. மேலும் இப்படத்தின் காட்சிகளை இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வரும் நிலையில், அதற்க்கு எச்சரிக்கை விடுத்தது இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்னை கம்பியால் அடித்தார்கள் – குக்வித் கோமாளி பிரபலங்கள் மீது புகார் கொடுத்த வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்!
அதில் அவர், “LIK படம் குறித்து தயவுசெய்து இன்ஸ்டாவில் வீடியோக்களைப் பதிவிடுவதை நிறுத்துங்கள். திரையரங்க அனுபவத்தை விரும்பும் பார்வையாளர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இந்த படத்தைத் திரையரங்குகளில் மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில், வார இறுதியில் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என கூறப்படுகிறது.