AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னை கம்பியால் அடித்தார்கள் – குக்வித் கோமாளி பிரபலங்கள் மீது புகார் கொடுத்த வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்!

Watermelon Star Diwakar Police Complaint: பிக் பாஸ் சீசன் 9ல் பிரபலமானவராக இருந்துவந்தவர் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர். இவர் இதுபோன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவரும் நிலையில், சமீபத்தில் குக்வித் கோமாளி சீசன் 7ல் கலந்துகொண்டார். அந்த ஷூட்டிங்கின்போது அவரை பிரபலங்கள் கம்பியால் தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

என்னை கம்பியால் அடித்தார்கள் – குக்வித் கோமாளி பிரபலங்கள் மீது புகார் கொடுத்த வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்!
திவாகர் போலீஸ் புகார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Apr 2026 06:48 AM IST

தமிழ் மக்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் முதல் மிகவும் பிரபலமானவர் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் (Watermelon star diwakar). இவர் நடிகர் சூர்யாவை போலவே செய்யைகை செய்து மக்கள் மத்தியில் பிரபலமான. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகியிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பிசியோதெரபிஸ்ட் ஆவார். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் மூலமாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ண்டு வருகிறார். மேலும் இவர் இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9ன் (Bigg Boss Season 9) நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து, பின் இறுதியாக வெளியேற்றப்பட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே இவரின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்து. இதையடுத்து தற்போது இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பணியாற்றிவருகிறார். மேலும் கடந்த 2026 ஏப்ரல் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி சீசன் 7 (Cook With Comali 7).

இதில் கோமாளியாக வாட்டர்மெலான் திவாகர் இணைந்திருந்தார். சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின்போது, தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் (Ma ka pa anand), பிக் பாஸ் கானா வினோத் (Gana Vinoth) மற்றும் புகழ் (Pugazh) ஆகிய பிரபலங்கள் தன்னை கம்பியால் தாக்கியதாக வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய தொடரில் நடிக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. எந்த டிவி சீரியல் தெரியுமா?

பிரபலங்கள் தன்னை தாக்கியது குறித்து வீடியோவை வெளியிட்ட வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்:

 

View this post on Instagram

 

A post shared by DIWAGAR (@diwagar693)

அந்த வீடியோவில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர், “கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின்போது, கானா வினோத் எனது குடும்பத்தை பற்றி தகாத வார்த்தையில் பேசினார். அதற்கு எதிராக நான் பேசிய நிலையில், கானா வினோத் மற்றும் புகழ் என்னை அடித்தனர். மேலும் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் குடிபோதையில், என்னை இரும்பு கம்பியால் தாக்கினார். அதனால் காலில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை ஈவிபி பிலிம் சிட்டி ஆகியே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு காவியக் காதல் கதை.. ரீ- ரிலீஸாகும் அஜித் -ஷாலினியின் அமர்க்களம் திரைப்படம் – எப்போது தெரியுமா?

தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமானது. அதிலும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 7 கடந்த 2026 ஏப்ரல் 4ம் தேதி முதலே ஆரம்பமான நிலையில், இந்த நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாகவே மைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் கலந்துகொண்டுவருகின்றனர். மேலும் நடிகை ரோஜாவும் இதில் நடுவராக இணைந்துள்ளார். அந்த வகையில் தற்போது 2வது வாரத்தில் இந்த பிரச்சனை நிலவும் நிலையில், இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us