AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இருமுகன் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் விக்ரம்? இசையமைப்பாளர் இவர்தான்!

Iru Mugan Movie Team Reunion: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருமுகன் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் விக்ரம்?  இசையமைப்பாளர் இவர்தான்!
விக்ரம் மற்றும் ஆனந்த் ஷங்கர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Apr 2026 17:20 PM IST

நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக புதிய படத்தில் விக்ரம் இணைந்திருந்தார். அந்த படம்தான் சியான்63 (Chiyaan63). இப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே.ராம்குமார் (Bodi K Ramkumar) இயக்கிவரும் நிலையில், சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் நடிகர் சியான் விக்ரமின் புது படம் குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. நடிகர் விக்ரம், இருமுகன் திரைப்பட (Iru Mugan) இயக்குநர் ஆனந்த் ஷங்கர் (Anand Shankar) இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளாராம். இது குறித்து விவரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் ஹரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நடிகர் பிரசாந்த்

சியான் விக்ரம் மற்றும் ஆனந்த் ஷங்கர் புதிய திரைப்படம் :

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஏற்கனவே இருமுகம் என்ற படத்தில் சியாவ் விக்ரமை வைத்து இயக்கியிருந்தார். கடந்த 2016ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கடந்த நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாம். இப்படத்தில் விக்ரம் லீட் கதாநாயகனாக நடிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மேலும் இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, டிஓபி ஆர்.டி ராஜசேகர் இப்படத்தில் இணையவுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகிறது. இப்படத்தின் அறிவிப்பு விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்றும், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சியான் விக்ரம் மற்றும் ஆனந்த் ஷங்கர் கூட்டணி படம் பற்றிய தகவல் பதிவு:


சியான் விக்ரம் தற்போது சியான்63 படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், இதன் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்ததாக விக்ரம், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us