AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர் – வைரலாகும் போட்டோ

Arasan Movie Shooting Update: நடிகர் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் படம் அரசன். இந்தப் படத்தில் முன்னதாக தனுஷ் நட்டிப்பில் வெளியான வட சென்னை படத்தின் நீட்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கதாப்பாத்திரத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர் – வைரலாகும் போட்டோ
அமீர், வெற்றிமாறன், கிஷோர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Apr 2026 11:30 AM IST

தமிழ் சினிமாவில் ஜன நாயகன் படத்தின் சர்சைக்கு முன்பு அதிக அளவில் பேசப்பட்டது அரசன் படத்தின் சர்ச்சை தான். நடிகர் சிலம்பரசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது உடல் எடையை குறைத்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. அதன்படி அரசன் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகின்றது. இதில் நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றத்தில் மூன்று காலங்களில் நடித்து வருவது போல காட்சியமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான படப்பிடிப்புகள் பிசியாக நடைப்பெற்று வந்தது. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தின் கதாப்பாத்திரங்கள் இந்த அரசன் படத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் கதாப்பாத்திரம் உள்ளதா இல்லையா என்பது படம் வெளியாகும் போதுதான் தெரியவரும். ஆனால் மற்ற கதாப்பாத்திரங்களின் நீட்சி இந்த அரசன் படத்தில் உள்ளதை இயக்குநர் முன்னதாகவே தெரிவித்து இருந்தார். இப்படி இருந்த நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் தயாரிப்பு நிறுவனம் முன்பு நடந்த விசயத்தை மீண்டும் தோண்டி நடிகர் சிம்புவின் அரசன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார். இந்தப் பிரச்சனை ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்து உள்ளது.

அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர்:

‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது; இதில் ராஜன் (அமீர்) மற்றும் செந்தில் (கிஷோர்) ஆகியோரின் இளமைக்காலக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் மிகவும் விறுவிறுப்பான அம்சம் என்னவென்றால், இந்தக் கதாபாத்திரங்கள் STR-உடன் எவ்வாறு இணைகின்றன என்பதுதான். இதற்கிடையில், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் கருப்புப் பட்டைகளை அணிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… தல அஜித்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் பில்லா படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us