AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் நடிப்பை ஆ…னு பார்த்து இருக்கேன் – நடிகை மமிதா பைஜூ

Actress Mamithabaiju: மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது கர படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை மமிதா பைஜூ பேசியது இனையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் நடிப்பை ஆ…னு பார்த்து இருக்கேன் – நடிகை மமிதா பைஜூ
நடிகை மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Apr 2026 12:01 PM IST

மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ பிறகு நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை தற்போது தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி முன்னதாக் டியூட் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாவதாக கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியில் அடுத்தடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இரண்டு வானம், ஜன நாயகன் என அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதன்படி நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அதில் குறிப்பாக நடிகை மமிதா பைஜூ பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த கர படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று:

இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. மேலும் கர படத்தில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு நன்றி. இந்த மைக்கை கையில் பிடித்திருக்கும்போது, ​​உண்மையில் எனக்குச் சற்றுப் பதற்றமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் சார், நாம் இணைந்து பணியாற்றுவது இது இரண்டாவது முறையாகும். உங்களுக்கு மிக்க நன்றி, சார். இறுதியாக, தனுஷ் நான் உங்கள் ரசிகை. நீங்கள் நடிக்கும்போது, ​​நான் ஒரு ஓரமாக நின்று வியப்புடன் உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் நடிகை மமிதா பைஜூ தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து – பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு

இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜூ பேச்சு:

Also Read… ஹாய் நானா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Follow Us